என் மலர்


ல்தகா சைஆ
ஒருவனுக்கு கனவில் தோன்றுவது எல்லாம் நிஜத்தில் நடக்கும் கதை.
கதைக்களம்
கதாநாயகனான சதா நாடார் மற்றும் கதாநாயகியான மோனிகா செலினா இருவரும் திருமணம் ஆகி அன்பான மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் சதாவுக்கு தூக்கத்தில் அடிக்கடி கனவு வருகிறது. இவர் காணும் கனவில் என்ன நடக்கிறதோ அவையெல்லாம் சதாவின் நிஜ வாழ்க்கையிலும் நடக்கிறது. இதைத்தொடர்ந்து சதாவுக்கு ஒரு நாள் தன்னுடைய மனைவி இறப்பது போன்ற கனவு வருகிறது. இதனால் தன்னுடைய நிஜ வாழ்க்கையிலும் தன் மனைவி சலினா இறந்துவிடுவாளோ என பயப்படுகிறார். இவருக்கு இந்த கனவு வர காரணம் என்ன? உண்மையில் இவரது மனைவி இறந்து விடுகிறா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
இப்படத்தின் முன்னணி கதாப்பாத்திரமாக நடித்து இருக்கு சதா மற்றும் மோனிகா ஓரளவுக்கு நடிக்க முயற்சி செய்துள்ளனர். ரொமேன்ஸ், ஆக்ஷன், பயம் என அனைத்து விஷயங்களையும் நடிப்பில் வெளிக்காட்ட முயற்சி செய்துள்ளார் சதா.
இயக்கம்
கனவில் நடப்பது நிஜத்தில் நடந்தால் என்ன ஆகும் என்ற கற்பனை கதையை இயக்கி நடித்துள்ளார் சதா நாடார். ஒருக்கட்டத்தில் பார்வையாளர்களுக்கு எது கனவு எது நிஜம் என்ற குழப்பம் ஏற்படுகிறது. வந்த காட்சிகள் மீண்டும் மீண்டும் வருவதால் பார்வையாளர்களுக்கு சலிப்பை ஏற்படுத்துகிறது.
இசை
ஜான்சனின் இசை பெரிதாக வொர்க் அவுட் ஆகவில்லை
ஒளிப்பதிவு
மனோ குமாரின் ஒளிப்பதிவு தெளிவாக இல்லை.
தயாரிப்பு
கோல்டன் ஸ்கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.








