என் மலர்


ஹவ் டு டிரெய்ன் யுவர் டிராகன்
.
கதைக்களம்
பெர்க்கின் வைக்கிங் கிராமத்தில் அடிக்கடி கால்நடைகளை ட்ராகன்களால் தூக்கி செல்லப்படுகிறது. இதனால் அந்த ஊர் மக்கள் டிராகன் மீது மிகவும் வெறுப்புடன் இருக்கின்றனர். டிராகன்களால் மிகவும் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதால் டிராகன்களை அளிக்க நினைக்கின்றனர். இதற்காக ஊர்மக்கள் அனைவரும் சேர்ந்து டிராகன்களை அழிக்க சில இயந்திரங்களை உருவாக்குகின்றனர்.
அதே நேரத்தில் ஊர் தலைவரின் மகனான ஹிக்கப் கொஞ்சம் பயந்த சுபாவத்துடன் உள்ளார், டிராங்களை பார்த்து பயப்படுகிறார். இதனை தெரிந்துக் கொண்ட ஊர் தலைவர் இதனால் தன் பையனை ட்ராகனுடன் மோத விடாமல் இரும்பு பட்டறையில் வேலை செய்ய வைக்கிறார்.
இந்த நேரத்தில் ட்ராகன் அட்டாக் நடக்க, அப்போது ஹிக்கப் தான் செய்த எந்திரத்தின் மூலம் ட்ராகன்களில் மிக மோசமானது என்று சொல்லப்படும் நைட் பியூரியை தாக்குகிறார்.
அடுத்த நாள் ஹிக்கப் நைட் பியூரியை தேடி செல்ல, அதன் இறக்கை ஒரு பக்கம் காயம் அடைந்து அதனால் பறக்க முடியாமல் இருக்கிறது. . ஊரே ட்ராகனை கொல்ல புறப்பட ஆனால், ஹிக்கப்போ நைட் பியூரியை குணப்படுத்தி, அதன் மூலம் ட்ராகன் குணங்களை அறிந்து அதனுடன் நட்பு பாராட்டி டிராகன் குண நலன்களை தெரிந்துக் கொள்கிறார். இதனால் மனிதர்களுக்கு டிராகன் ஆபத்தனவை இல்லை என புரிந்துக் கொள்கிறார். இதனை அவருடைய ஊர் மக்களுக்கும் புரிய வைக்க முயற்சி செய்கிறார். இந்த பயணத்தில் அவர் வெற்றி பெற்றாரா என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தின் நாயகனாக நடித்து இருக்கும் மேசன் தாமஸ் மிகவும் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். டிராகனுடல் பழக முயற்சிப்பது, அதில் ஏறூம் பயணிப்பது என அனைத்து காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
மற்ற நடிகர்களான நிகோ பார்கர், ஜெரார்ட் பட்லர், நிக் ப்ராஸ், பிரவுன் ஜேம்ஸ் என அனைத்து நடிகர்கள் கொடுத்த கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர்.
இயக்கம்
2010-ல் வெளியான அனிமேஷன் படத்தை லைவ் ஆக்ஷனில் படப்பிடித்து அப்படத்தில் உள்ள சுவாரசியம் கதையம்சம் மாற்றாமல் ஒரு நல்ல ரீமேகிற்கு நொயாயம் சேர்த்துள்ளார் இயக்குநர் டீன் டிபிலாய்ஸ். படத்தின் விஷ்வல் காட்சிகளில் பெரிதும் மெனெகெட்டுள்ளார் இயக்குநர். திரைக்கதை சுவாரஸ்சியமாக அமைத்தது படத்தின் ப்ளஸ். படத்தில் இடம் பெற்ற எமோஷனல் காட்சிகள் பெரும் இடங்களில் வொர்க் அவுட் ஆனது படத்தின் பலம்.
ஒளிப்பதிவு
பில் போப் படத்தின் ஒளிப்பதிவு நம்மை அந்த உலகத்திற்கே நம்மை அழைத்து செல்கின்றது. அதுகவும் குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் மெய் சிலிர்க்க வைக்கிறது.
இசை
ஜான் போவல் - இன் பின்னனி இசை காட்டியமைப்பிற்கும், திரைக்கதை பயணத்திற்கும் பெரிதும் உதவியுள்ளது.









