என் மலர்


ஹிட்: 3
கதைக்களம்
நானி ஒரு கருணை இல்லாத போலிஸ் அதிகாரியாக இருக்கிறார். இவர் படத்தின் தொடக்கத்தில் சில நபர்களை கொடூரமாக கொலை செய்து அதனை வீடியோ எடுத்து யாருக்கோ அனுப்புகிறார். அதற்கு பின் தான் செய்த கொலை வழக்கை அவரே விசாரிக்கிறார். இப்படி பல ஊரில் பலர் இது மாதிரி கொலைகளை செய்து அதனை வீடியோ எடுத்து ஒரு வலைத்தளத்தில் பதிவு செய்கின்றனர். இவர்கள் ஏன் இவ்வாறு செய்கின்றனர்? இதற்கு பின்னணி என்ன? நானி கொலை செய்வதற்கு காரணங்கள் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
நானி மிடுக்கான மற்றும் முரட்டுதனமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஆக்ஷன் காட்சிகளில் அதிகம் கவனம் செலுத்தியுள்ளார். ஸ்ரீனிதி ஷெட்டி அழகான மற்றும் அளவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக கிளைமாக்ஸ் ஆக்ஷன் காட்சியில் ஸ்கோர் செய்துள்ளார். படத்தில் நடித்த பிற கதாப்பாத்திரங்கள் அவர்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.
இயக்கம்
ஹிட் படங்களுக்கு உரிய அதே பாணியில் சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படமாக இயக்கியுள்ளார் சைலேஷ் கொலானு. முதல் பாதி திரைக்கதையின் விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் இருந்து இருந்தால் படத்தை கூடுதலாக ரசித்து இருக்கலாம். இரண்டாம் பாதி காட்சி பெரும்பாலும் அந்த ஓட்டல் ஒன்றில் நடப்பது பார்வையாளர்களுக்கு சோர்வை ஏற்படுத்தியுள்ளது.
ஒளிப்பதிவு
சனு ஜான் வர்கீஸ் திறமையான ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். ஆக்ஷன் காட்சியை திறமையாக கையாண்டுள்ளார்.
இசை
மிக்கியின் இசையில் அமைந்த பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை திரையோட்டத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது.
ஸ்டண்ட்
லீ விட்டேகர் இயக்கிய சண்டை காட்சிகள் அபாரம் மற்றும் கிளைமேக்ஸ் காட்சியில் அமைந்த சண்டை காட்சிகளுக்கு மிகப்பெரிய பாராட்டுகள்.
தயாரிப்பு
வால் போஸ்டர் சினிமா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.










