search icon
என் மலர்tooltip icon
    < Back
    Hi Nanna
    Hi Nanna

    ஹாய் நான்னா

    இயக்குனர்: சவுரவ்
    எடிட்டர்:பிரவின் ஆண்டனி
    ஒளிப்பதிவாளர்:ஷனு வர்க்கீஸ்
    இசை:ஹேஷாம் அப்துல் வஹாப்
    வெளியீட்டு தேதி:2023-12-07
    Points:2118

    ட்ரெண்ட்

    வாரம்123456
    தரவரிசை846951401410
    Point459732279153287208
    கரு

    மனைவியை பிரிந்த கணவன் குறித்த கதை.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    புகைப்பட கலைஞரான நானிக்கு நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட மகள் இருக்கிறார். தாய் இல்லாத குழந்தை என்பதால் நானி மிகவும் கவனமாக மகளை பார்த்துக் கொள்கிறார். தினமும் தன் குழந்தைக்கு இரவில் கதை சொல்லும் நானி, மகளுக்கு அம்மா என்ற கதாபாத்திரத்தை ஞாபகப்படுத்தாமல் கதை சொல்கிறார்.

    ஒரு நாள் குழந்தை அம்மாவை பற்றி சொல்லியாக வேண்டும் என்று அடம் பிடிக்கிறாள். இதனால் நானி நீ வகுப்பில் முதல் ராங் எடுத்தால் அம்மாவை பற்றி சொல்கிறேன் என்று கண்டீசன் போட சிறுமியும் படித்து முதல் ராங்க் எடுத்துவிடுகிறாள். பின்னர் நானியிடம் அம்மா குறித்து கேட்கிறாள். அன்று அலுவலகத்தில் நடந்த பிரச்சனையால் கேபமாக இருக்கும் நானி மகளை திட்டிவிடுகிறார்.

    இதனால் கோபமான சிறுமி தன் நாயை அழைத்து கொண்டு வெளியே செல்கிறாள். அப்போது சிறுமிக்கு நுரையீரல் பிரச்சனை ஏற்பட மிருணாள் தாகூர் சிறுமியை காப்பாற்றுகிறார். பின்னர் நானியை அழைத்து குழந்தையை ஒப்படைக்கும் போது குழந்தையும் மிருணாள் தாகூரும் சேர்ந்து அவரின் மனைவி குறித்து கேட்கிறார்கள்.

    இறுதியில், நானி தன் மனைவி குறித்து சொன்னாரா? தன் குழந்தைக்கு அம்மா பற்றி ஏன் கூறவில்லை? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    நடிகர் நானி தந்தை கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்துள்ளார். அன்பு, அழுகை, பாசம் என நடிப்பில் கவர்ந்திருக்கிறார். படத்தை முழுவதுமாக தாங்கி பிடித்துள்ளார். நாயகி மிருணாள் தாகூர் தன் அழகான நடிப்பின் மூலம் ரசிக்க வைத்துள்ளார். ஜெயராம், சிறுமி கியாரா கண்ணா ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.

    இயக்கம்

    காதலை மையமாக வைத்து படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் சவுரவ். காதல் கதை என்றாலும் அதை மிகவும் ரசிக்கும் படியாகவும் விறுவிறுப்பாகவும் இயக்கியுள்ளார். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார்.

    இசை

    ஹேஷாம் அப்துல் வஹாப் இசை தாளம் போட வைக்கிறது. பின்னணி இசை மூலம் ஸ்கோர் செய்துள்ளார்.

    ஒளிப்பதிவு

    ஷனு வர்க்கீஸ் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தளித்துள்ளது.

    படத்தொகுப்பு

    பிரவின் ஆண்டனி படத்தொகுப்பு சிறப்பு.

    காஸ்டியூம்

    ஷீடல் சர்மா மற்றும் லக்‌ஷ்மி கிலாரி கதாபாத்திரத்திற்கு ஏற்ற காஸ்டியூம் டிசைன் செய்துள்ளார்கள்.

    புரொடக்‌ஷன்

    வைரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ‘ஹாய் நான்னா’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.


    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    வாசகர் விமர்சனம்
    2023-12-12 11:05:29.0
    vigneshwari kumar

    Nice

    ×