என் மலர்tooltip icon
    < Back
    ஃபரம் தி வேர்ல்ட் ஆஃப் ஜான் விக்: பாலரினா திரைவிமர்சனம் | From the World of John Wick: Ballerina Review in tamil
    ஃபரம் தி வேர்ல்ட் ஆஃப் ஜான் விக்: பாலரினா திரைவிமர்சனம் | From the World of John Wick: Ballerina Review in tamil

    ஃபரம் தி வேர்ல்ட் ஆஃப் ஜான் விக்: பாலரினா

    இயக்குனர்: லென் வைஸ்மேன்
    எடிட்டர்:ஜேசன் பாலன்டைன்
    ஒளிப்பதிவாளர்:ரோமெய்ன் லாகூர்பாஸ்
    இசை:ஜோயல் ஜே ரிச்சர்ட்
    வெளியீட்டு தேதி:2025-06-13
    Points:1085

    ட்ரெண்ட்

    வாரம்12
    தரவரிசை226223
    Point465620
    கரு

    தன் அப்பாவின் இறப்புக்கு காரணமானவர்களை பழி வாங்கும் மகளின் கதை.

    விமர்சனம்

    கதைக்களம்

    கதாநாயகியான அனா டி ஆர்ம்ஸ் அவர் அப்பாவுடன் வாழ்ந்து வருகிறார். இவர் சிறுவயதாக இருக்கும் போதே ஒரு கேங்ஸ்டர் க்ரூப் வந்து அவருடைய அப்பாவை அனா கண் முன்னே கொன்று விடுகின்றனர்.

    அந்த சிறு வயதில் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்க, அவரை வின்ஸ்டன் ராஸ்கோ ரோமாவில் பாதுக்காப்பிற்காக சேர்த்து விடுகிறார். அங்கே மிகபெரிய அஸாசின் ஆக வேண்டும் என்ற வெறியுடன் கடுமையான பயிற்சி எடுத்து கற்றுக்கொள்கிறார். அவருக்கு ஒரு சிலரை காப்பாற்றும் சிறு சிறு ப்ராஜெக்ட் கிடைக்கிறது.

    அப்படி ஒரு ப்ராஜக்டில் இவரின் தந்தையை கொன்ற அந்த நபரை கொல்ல ஒரு வேலை வருகிறது. அவனை கொல்வதற்காக அனா கிளம்புகிறார். இவரது பழிவாங்கும் பயணம் வெற்றிப்பெற்றதா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    அனா டி ஆர்ம்ஸ் ஒற்றை ஆளாக தன் நடிப்பின் மூலம் படத்தை தாங்கியுள்ளார். குறிப்பாக ஆக்‌ஷன் காட்சிகளில் மிரட்டியுள்ளார். தன்னை விட வலுவான ஆண்களை எதிர்ப்பது என காட்சிக்கு காட்சி ஆக்‌ஷன் ருத்ரதாண்டவம் ஆடியுள்ளார்.கேமியோ கதாப்பாத்திரமாக வரும் ஜான் விக் சில நிமிடங்கள் வந்தாலும் திரையரங்கை தன் வசமாக்குகிறார்.

    இயக்கம்

    ஜான் விக் பிரான்சிஸில் பெலரினா படத்தை இயக்கியுள்ளார் லென் வைஸ்மேன். ஜான் விக் பிரான்சிஸ்கு நியாயம் சேர்த்துள்ளார். சண்டை காட்சிகளை காட்சிபடுத்தியவிதம் பாராட்டுக்குறியவையாகும். சில லாஜிக் மீறல்களை தவிர்த்திருக்கலாம். படத்தின் டெக்னிக்கல் விஷயங்களை மிகவும் சாமர்த்தியமாக படக்குழு கையாண்டுள்ளது.

    ஒளிப்பதிவு

    ரொமைன் லாகர்பாசின் ஒளிப்பதிவு படத்தின் பெரிய பலம். இரவில் நடக்கும் காட்சிகளை சிறப்பாக படமாக்கியுள்ளார்.

    இசை

    டைலர் பேட்ஸ் மற்றும் ஜோயல் ரிச்சர்டின் பின்னணி இசை பட ஓட்டத்திற்கு பெரிதும் உதவியுள்ளது.

    தயாரிப்பு

    Thunder Road Films and 87eleven Productions நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×