என் மலர்


பைனல் டெஸ்டினேஷன்: ப்ளூட்லின்ஸ்
.ஃபைனல் டெஸ்டினேஷனின் அடுத்த பாகமாக உருவாகியுள்ளது Final Destination Bloodlines திரைப்படம்.
கதைக்களம்
கதாநாயகியான சாண்டாஜுவானாவிற்கு அடிக்கடி அவரது பாட்டி ஒரு கொலையை தடுத்து நிறுத்துவது போன்ற கனவுகள் தொடர்ந்து வருகிறது. இதற்கான காரணம் தெரிந்துக் கொள்ள வேண்டும் என தனக்கும் இந்த கனவுக்கு, தன் குடுபத்திற்கும் என்ன சம்பந்தம் என்ற முயற்சியில் இறங்குகிறார். அப்போது பாட்டியை சந்தித்து அதற்கான விடையை தெரிந்துக் கொள்ள கேட்கிறார். அப்போது பாட்டி கூறும் காரணத்தை இவர் நம்ப மறுக்கிறார். அப்போது பாட்டி மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். இதற்கு அடுத்து பலர் ஃபைனல் டெஸ்டினேஷன் பாணியில் இறக்க தொடங்குகிறார்கள். இதற்கு அடுத்து என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
கதாநாயகியான சாண்டா ஜுவானா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி படத்தை தன் தோளில் சுமந்துள்ளார். அவர் நடித்த கதாப்பாத்திரத்தை நேர்த்தியாக கையாண்டுள்ளார்.
பாட்டியின் இளமை கதாப்பாத்திரத்தில் நடித்த பிரக் பாஸி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். குறைந்த நேரம் மட்டுமே திரையில் வந்தாலும் பார்வையாளர்களின் மனதில் இடம் பெறுகிறார். மற்ற கதாப்பாத்திரத்தில் நடித்த அனைவரும் அவர்களுக்கு கொடுத்த வேலையை உணர்ந்து நடித்துள்ளனர்.
இயக்கம்
ஃபைனல் டெஸ்டினேஷனின் வழக்கமான அம்சங்களை கொண்டு 56 வருடங்களுக்கு முன் நடக்க வேண்டிய கொலை தற்பொழுது நடைப்பெறவுள்ளது என்பதை மையமாக வைத்து இயக்கியுள்ளார் இயக்குநர் ஸாக் மற்றும் அடாம். படத்தில் இடம் பெற்ற ஸ்கேன்னர் மற்றும் ரெஸ்டாரண்டில் நடை பெறும் காட்சி திரையரங்கிள் ரசிக்க முடிகிறது. படத்தின் இரண்டாம் பாதி திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்திருக்க வேண்டும். VFX-ல் கூடுதல் கவனம் செலுத்திருக்க வேண்டும்.
ஒளிப்பதிவு
கிறிஸ்டியன் செபால்டின் ஒளிப்பதிவு அட்டகாசமாக அமைந்து இருக்கிறது.
இசை
டிம் வின் பின்னணி இசை படத்தின் பெரிய பலம்.
தயாரிப்பு
Warner Bros நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.







