என் மலர்


எஃப் 1
பிராட் பிட் தன் நண்பனின் அணிக்காக ரேஸ் ஓட்டும் கதை
கதைக்களம்
படத்தின் கதாநாயகனான பிரான் பிட் ஒரு காலத்தில் ரேஸராக கலக்கிக்கொண்டு இருக்கிறார். கலந்து கொள்ளும் அனைத்து ரேஸிலும் வெற்றி பெறுகிறார். அதற்கு பிறகு இவருக்கு ஒரு எதிர்பாரா விபத்து ஏற்படுகிறது. அதன் சிகிச்சையில் ஈடுப்பட்டு பல ஆண்டுங்கள் ரேசில் கலந்துக் கொள்ள முடியாமல் போகிறது. அதன் பிறகு சிறிது உடல்நிலை சரியானப்பிறகு பணத்தேவைக்காக அவ்வப்போது கார் ரேஸ் ஓட்டி வருகிறார்.
இந்நிலையில் இவரது நண்பர் ரூபனின் கார் நிறுவனத்திற்காக F1 ரேஸ் ஓட்ட அழைக்கிறார் ஏனென்றால் அவருடைய அணி அனைத்து ரேசிலும் தோல்வியை சந்தித்து பின் தங்கி இருக்கிறது. அதற்கு பின் பிராட் பிட் சம்மதித்து F1 ரேஸ் ஓட்ட வருகிறார். அங்கு இளம் புயலாக பறக்கும் ஜோஸ்வாவுடன் இணைந்து ரேஸ் ஓட்டுகிறார்.
எப்படியாவது தன்னை நம்பிய APX நிறுவனத்தை ஜெயிக்க வைக்க ப்ராட்பிட் போராடுகிறார். இதற்கு அடுத்து என்ன ஆனது? ப்ராட்பிட் அணியை வெற்றி பெற செய்தாரா? அந்த அணி என்ன ஆனது? பிராட்பிட் சந்தித்த சிக்கல்கள் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
ப்ராட்பிட் ஒரு ரேஸராக நடித்திருக்கிறார் என்பதை விட வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். படம் முழுவதும் அவ்வளவு ஸ்வாக், ரேஸுக்கு முன்பு திமிராக பேசுவது, தனக்கு தோன்றுவதை செய்வது, ஒரு ஆட்டிட்யூடுடன் நடந்துப்பது பார்வையாளர்களை கட்டிப்போடுகிறது.
இளம் ரேசராக நடித்து இருக்கும் ஜோஸ்வா, அவருக்கும் பிராட் பிட்டும் இருக்கும் முரண், ஈகோ என அவருடைய கதாப்பாத்திரமும் மனதில் பதிகிறது. பிரான் பிட் நண்பனாக நடித்து இருக்கும் ரூபன் கொடுத்த கதாப்பாத்திரத்திற்கு நியாயம் சேர்த்துள்ளார்.
இயக்கம்
டாப் கன் மேவ்ரிக் படத்தை இயக்கிய ஜோசப் கொசின்ஸ்கி இப்படத்தை மிகவும் பிரம்மாண்டமாக மிகவும் எமோஷனலாக இயக்கியுள்ளார். ஒரு F1 ரேஸ் களத்தில் நாமே அந்த ரேஸில் ஈடுப்படுவது போன்ற உணர்வை பார்வையாளர்களுக்கு கடத்தியுள்ளது படத்தின் பலமாகும். படத்தின் கிளைமாக்ஸ் காட்சி மிகப்பெரிய ப்ளஸாக அமைந்துள்ளது.
ஒளிப்பதிவு
டெக்னிக்கலாக படம் பெரும் வலுவாக உள்ளது, அதிலும் சீறிப்பாயும் அந்த ரேஸ் கார்களை துல்லியமாக படம் பிடித்து க்ளாடியோ மிராண்டா ஒளிப்பதிவில் மிரட்டியுள்ளார்.
இசை
ஹான்ஸ் ஜிம்மரின் பின்னணி இசை படத்தின் பெரிய பலமாக அமைந்துள்ளது.
தயாரிப்பு
ஆப்பிள் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
Nice









