search icon
என் மலர்tooltip icon
    < Back
    Enga Veetla Party
    Enga Veetla Party

    எங்க வீட்ல பார்ட்டி

    இயக்குனர்: கே சுரேஷ் கண்ணா
    இசை:சுரேஷ் சர்மா
    வெளியீட்டு தேதி:2024-01-05
    Points:38

    ட்ரெண்ட்

    வாரம்12
    தரவரிசை246212
    Point1523
    கரு

    கொலையால் ஏற்படும் பிரச்சனை குறித்த கதை.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    ஐந்து இளைஞர்களும், இரண்டு பெண்களும் முகநூல் மூலம் பழகி ஒரு இடத்தில் சந்தித்து மது அருந்தி போதையாகி தூங்கி விடுகின்றனர். மறுநாள் பொழுது விடிந்து பார்க்கும்போது இரண்டு பெண்களில் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். இதனால் ஆறு பேரும் பதறுகிறார்கள்.

    கொலை செய்தது யார் என்று ஒருவர் மீது ஒருவர் சந்தேகித்து குற்றம் சுமத்துகிறார்கள். இறந்த பெண்ணின் சடலத்தை யாருக்கும் தெரியாமல் அப்புறப்படுத்த முயற்சிக்கிறார்கள். ஆனால் அதற்குள் போலீஸ் வருகிறது. விசாரணையும் நடக்கிறது. ஆறு பேரும் தாங்கள் கொலை செய்யவில்லை என்று மறுக்கிறார்கள்.

    இறுதியில் கொலையாளி யார்? கொலைக்கான காரணம் என்ன என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    யாத்ரா, சாசனா, ஹன்சி வர்கீஸ், சக்தி, ஒமேரா மேத்வின், தயூப், சாய் சதீஷ், கார்த்திகேயன், சிபு சரவணன் ஆகியோர் கதையின் முக்கிய கதாபாத்திரங்களாக வந்து அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். கொலையுண்ட பெண்ணின் சடலத்துடன் தவிப்பது, போலீஸ் விசாரணையில் மிரள்வது என்று கவனிக்க வைக்கிறார்கள்.

    ஓரின சேர்க்கையாளர்களாக வருபவர்களின் உணர்வுப்பூர்வமான நடிப்பு கவனிக்க வைக்கிறது. போலீஸ் உயர் அதிகாரியாக வரும் சிவபிரகாஷ் நேர்த்தியான நடிப்பை வழங்கி உள்ளார். கொலையுண்ட பெண்ணின் சடலம் வீட்டுக்குள் இருக்கும்போது வேலைக்காரப் பெண், பிளம்பர், பால்காரர் என ஒவ்வொருவராக வந்துபோவதும், சடலம் அவர்கள் பார்வையில் பட்டுவிடாதபடி சமாளிப்பதும் சுவாரசியம்.

    சந்தியாவாக வருபவர் காதலனுடன் டூயட் ஆடும்போது ஈர்க்கிறார். அந்த காதலன் காதலியை இழந்தபின் அழுதுபுலம்பி பரிதாபத்தைச் சம்பாதிக்கிறார்.

    இயக்கம்

    இன்றைய தலைமுறையினரின் மனப்போக்கையும், வலைத்தள கேடுகளையும் திகிலும், கலகலப்புமாக விறுவிறுப்பாக காட்சிப்படுத்தி உள்ளார் இயக்குனர் கே.சுரேஷ் கன்னா. பெரும்பகுதி காட்சிகள் வீட்டுக்குள் ஒரே இடத்தில் நகர்வது பலவீனம்.

    இசை

    சுரேஷ் சர்மாவின் பின்னணி இசை கதைக்கு பலம் சேர்த்துள்ளது, கோபிஸ்ரீயின் இசையில் ‘மாயவா மதுசூதனா', ‘பொம்முக்குட்டி' பாடல்கள் மனதில் நிற்கின்றன.

    ஒளிப்பதிவு

    ஆர்.பாலாவின் ஒளிப்பதிவு கச்சிதம்.

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×