search icon
என் மலர்tooltip icon
    < Back
    Enaku Endey Kidaiyaathu
    Enaku Endey Kidaiyaathu

    எனக்கு எண்டே கிடையாது

    இயக்குனர்: விக்ரம் ரமேஷ்
    எடிட்டர்:முகன்வேல்
    ஒளிப்பதிவாளர்:தளபதி ரத்தினம்
    இசை:கலாசரண்
    வெளியீட்டு தேதி:2023-10-06
    Points:30

    ட்ரெண்ட்

    வாரம்123
    தரவரிசை250224131
    Point15123
    கரு

    பிரச்சனையில் மாட்டிக் கொண்ட நாயகன் எப்படி தப்பிக்கிறார் என்பது குறித்த கதை.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    நாயகன் டாக்ஸி டிரைவராக வேலை பார்க்கிறார். ஒருநாள் இரவு பாரில் இருந்து ஒரு பெண் அந்த காரில் ஏறுகிறார். இருவரும் பயணம் செய்யும் போது பேசி நண்பர்களாகுகின்றனர். அப்போது அந்த பெண், நாயகனை தன் வீட்டிற்கு மது குடிக்க அழைக்கிறார். நாயகனும் அவரின் அழைப்பை ஏற்று வீட்டிற்கு செல்கிறார்.

    இருவரும் மது குடித்துக் கொண்டு எல்லாம் முடித்த பின்னர் நாயகி பாத்ரூமை நோக்கி செல்கிறார். அப்போது ஒரு அறையில் பிணம் இருப்பதை கண்டு நாயகன் அதிர்ச்சியடைகிறார். இந்த வீட்டில் இருந்து தப்பிக்க முயல்கிறார். ஆனால் வீடு பிங்கர் பிரிண்ட் சென்சாரில் செயல்படுவதால் அவனாள் தப்பிக்க முடியவில்லை.

    நாயகன் தப்பிக்க முயற்சிப்பதை அந்த பெண் பார்த்து விடுகிறார். இதனால் இருவருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு அந்த பெண் மயங்கி விழுகிறார். இது ஒருப்பக்கம் இருக்க நாயகி வீட்டிற்கு ஒரு திருடன் வருகிறான். அவன் சென்சாரை பயன்படுத்தி வீட்டிற்குள் நுழைகிறான்.

    இறுதியில் இந்த வீட்டில் இருக்கும் மர்மம் என்ன? வீட்டில் இருந்து நாயகன் தப்பித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    நாயகனாக நடித்திருக்கும் விக்ரம் ரமேஷ் தேவையான நடிப்பை கொடுத்து தன் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். நாயகி சுயம் சித்தா அழகாக வந்து கவர்கிறார்.

    இயக்கம்

    டார்க் காமெடி ஜானரில் கிரைம் த்ரில்லர் கதையாக படத்தை உருவாக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் விக்ரம் ரமேஷ். திரைக்கதை சற்று விறுவிறுப்பாக இருந்தாலும் ஒரே வீட்டில் கதை செல்வது சலிப்பை ஏற்படுத்தியுள்ளது. கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

    இசை

    கலாசரண் இசை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

    ஒளிப்பதிவு

    ரத்னம் படத்திற்கு தேவையான ஒளிப்பதிவை கொடுத்துள்ளார்.

    படத்தொகுப்பு

    முகன் வேல் படத்தொகுப்பு கவனம் ஈர்க்கவில்லை.

    புரொடக்‌ஷன்

    ஹங்கிரி வூல்ஃப் புரொடக்‌ஷன் நிறுவனம் ‘எனக்கு எண்டே கிடையாது’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.


    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×