என் மலர்tooltip icon
    < Back
    இஎம்ஐ  திரைவிமர்சனம்  | EMI Review in Tamil
    இஎம்ஐ  திரைவிமர்சனம்  | EMI Review in Tamil

    இஎம்ஐ

    இயக்குனர்: சதாசிவம் சின்னராஜ்
    எடிட்டர்:ஆர்.ராமர்
    ஒளிப்பதிவாளர்:பிரான்சிஸ் ராஜ்குமார்
    இசை:ஸ்ரீநாத் பிச்சை
    வெளியீட்டு தேதி:2025-04-04
    Points:437

    ட்ரெண்ட்

    வாரம்12
    தரவரிசை344351
    Point213224
    கரு

    EMI- ஆல் அவதிப்படும் கதாநாயகனின் கதை

    விமர்சனம்

    கதைக்களம்

    நாயகன் சதாசிவம் சின்னராஜ் மாம்பழ தொழிற்சாலையில்  பணி புரிந்து வருகிறார். அங்கு கதாநாயகியான சாய் தன்யாவை கண்டதும் காதலில் விழுகிறார்.சாய் தன்யாவை இம்பிரெஸ் செய்வதற்காக  மாத தவணையில் பைக் மற்றும் காரை emi ல் வாங்குகிறார். அதன் பிறகு காதல் கணிந்து திருமணமாகி,  இல்லற வாழ்க்கையை நல்லபடியாக நடத்தி வருகிறார்கள். இப்படி வாழ்க்கை நன்றாக சென்றுக் கொண்டு இருக்கும் போது. சதாசிவத்திற்கு வேலை போகிறது. இதனால் பண நெருக்கடியில் சிக்குகிறார். வாங்குன கடனை திருப்பி தரமுடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதற்கு அடுத்து என்ன ஆனது? கடன் தொல்லையில் இருந்து எப்படி மீண்டார்? இதனால் இவர் படும் இன்னல்கள் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    பக்கத்து வீட்டு பையன் போன்று தோற்றத்தில் மட்டும் இன்றி நடிப்பிலும் எளிமையாக பயணித்திருக்கும் சதாசிவம், மக்கள் மனதில் எளிதாக இடம் பிடித்து விடுகிறார். மாத தவணையில் ஆசைப்படும் பொருட்களை வாங்கிவிட்டு அதன் பிறகு அதனை கட்டும் போது திண்டாடுவதை மில அழகாக திரையில் நடித்துள்ளார். நாயகியாக நடித்திருக்கும் சாய் தன்யாவுக்கு பெரிய அளவில் வாய்ப்பு இல்லை என்றாலும், கொடுத்த கதாப்பாத்திரத்தை திறம்பட நடித்துள்ளார். நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் இயக்குநர் பேரரசு மேடைகளில் பேசும் அளவுக்கு கூட படத்தில் பேசாதது அவரது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது.  நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் செந்தி குமாரி வழக்கம் போல் வந்து போகிறார். நாயகனின் நண்பராக நடித்திருக்கும் பிளாக் பாண்டி, மாத தவணை வசூலிப்பவராக நடித்திருக்கும் சன் டிவி ஆதவன் ஆகியோரது காமெடி ஓரிரு இடத்தில் சிரிக்க முயற்சித்துள்ளனர் ஓ.ஏ.கே.சுந்தர், லொள்ளு சபா மனோகர் ஆகியோறும் முகம் காட்டுகிறார்கள்.

    இயக்கம்

    மாத தவணை மூலம் பல வசதிகளை அனுபவிப்பவர்கள், அதை கட்ட முடியாமல் எத்தகைய ஆபத்துகளில் சிக்கிக் கொள்கிறார்கள், என்பதை விவரிக்கும் திரைக்கதையை பிரச்சாரமாக சொல்லாமல், காதல், காமெடி, செண்டிமண்ட் என கலந்து சொல்ல முயற்சி செய்துள்ளார் இயக்குநர் சதாசிவம். அடுத்து என்ன போகிறது என சுவாரசியம் இல்லாதது படத்தின் பலவீனம். படத்தின் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்

     இசை

    இசையமைப்பாளர் ஸ்ரீநாத் பிச்சையின் இசை கேட்கும் ரகம்

    ஒளிப்பதிவு

    படத்தை கலர்புல்லாக காட்சிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் பிரான்ஸிஸ், நாயகன் புதுமுகம் என்பதால், அவருக்காக அதிகம் மெனக்கெட்டிருக்கிறார்

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×