என் மலர்tooltip icon
    < Back
    டிராகன் திரைவிமர்சனம் | Dragon Review in Tamil
    டிராகன் திரைவிமர்சனம் | Dragon Review in Tamil

    டிராகன்

    இயக்குனர்: அஸ்வத் மாரிமுத்து
    எடிட்டர்:பிரதீப் ஏ ராகவா
    ஒளிப்பதிவாளர்:நிகேத் பொம்மி
    இசை:லியோன் ஜேம்ஸ்
    வெளியீட்டு தேதி:2025-02-21
    Points:35377

    ட்ரெண்ட்

    வாரம்123456
    தரவரிசை23124543
    Point4564101119575610533991623
    கரு

    நிறைய தப்பு செய்து திருந்தி வாழும் நாயகனின் கதை.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    பள்ளியில் படிக்கும் நாயகன் பிரதீப் ரங்கநாதன், நன்றாக படித்து கோல்ட் மெடல் வாங்குகிறார். அதன்பின் தன் காதலை ஒரு பெண்ணிடம் சொல்லுகிறார். அந்த பெண், நீ நன்றாக படிக்கிற பையன். எனக்கு கெத்தாக இருக்கும் பையன் தான் பிடிக்கும் என்று பிரதீப் ரங்கநாதன் காதலை ஏற்க மறுக்கிறார்.

    பள்ளி படிப்பை முடித்து கல்லூரியில் சேரும் பிரதீப் ரங்கநாதன், அங்கு படிக்காமல் கெத்தாக சுத்துகிறார். மேலும் 48 பேப்பர் அரியர் வைக்கிறார். இவரும் நாயகி அனுபமா பரமேஸ்வரனும் காதலிக்கிறார்கள். கல்லூரி முடிந்து 2 வருடங்கள் ஆன நிலையில், பிரதீப் ரங்கநாதன் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வருவதால் அனுபமா பரமேஸ்வரனும், அவரை விட்டு பிரிகிறார்.

    வருத்தம் அடையும் பிரதீப் வேலையில் சேர முடிவு செய்கிறார். ஆனால், 48 பேப்பர் அரியர் இருப்பதால் வேலை கிடைக்காமல் திரிகிறார். ஒரு கட்டத்தில் போலி சான்றிதழ் வாங்கி வேலைக்கு சென்று நன்றாக சம்பாதிக்கிறார். பணக்கார பெண்ணை திருமணம் செய்யும் நிலையில், பிரதீப் வாழ்க்கையில் பிரச்சனை ஏற்படுகிறது.

    இறுதியில் பிரதீப்புக்கு வந்த பிரச்சனை என்ன? பணக்கார பெண்ணை திருமணம் செய்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் பிரதீப் ரங்கநாதன், காதல், நண்பர்களுடன் சேட்டை என சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். படிப்புதான் வாழ்க்கை என்று உணரும் காட்சியில் நெகிழ வைத்து இருக்கிறார். ஒரு சில இடங்களில் குறும்புத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி கவர்ந்து இருக்கிறார். இறுதி காட்சியில் கண்கலங்க வைத்து இருக்கிறார்.

    நாயகியாக நடித்து இருக்கும் அனுபமா பரமேஸ்வரன் முதிர்ச்சியான நடிப்பால் ரசிக்க வைத்து இருக்கிறார். பிரதீப் ரங்கநாதனை நினைத்து வருந்துவது, அவருக்கு ஊக்கம் கொடுப்பது என கவனிக்க வைத்து இருக்கிறார். மற்றொரு நாயகியாக நடித்து இருக்கும் கயடு லோஹர், அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்து இருக்கிறார்.

    கல்லூரி தலைமை ஆசிரியராக வரும் மிஷ்கின், விபியாக வரும் கவுதம் மேனன் ஆகியோரின் நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.

    இயக்கம்

    கல்லூரி படிப்பை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் பாதி திரைக்கதை மெதுவாகவும், இரண்டாம் பாதி சுவாரஸ்யமாகவும் நகர்த்தி இருக்கிறார். வாழ்க்கையில் வெற்றி பெற என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைக்கும் ஒருவனின் வாழ்க்கையை சொல்லி இருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் கவனிக்க வைத்து இருக்கிறார் இயக்குனர்.

    இசை

    லியோன் ஜேம்ஸ் இசையில் பாடல்கள் அனைத்தும் தாளம் போட வைக்கிறது. பின்னணி இசையில் அதிக ஸ்கோர் செய்து இருக்கிறார்.

    ஒளிப்பதிவு

    நிகேத் பொம்மிரெட்டியின் ஒளிப்பதிவு சிறப்பு.

    தயாரிப்பு

    கல்பாத்தி எஸ் அகோரமின் ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது,

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×