search icon
என் மலர்tooltip icon
    < Back
    Chiclets
    Chiclets

    சிக்லெட்ஸ்

    இயக்குனர்: பத்மாவதி முத்து
    எடிட்டர்:விஜய் வேலுகுட்டி
    ஒளிப்பதிவாளர்:கொளஞ்சி குமார்
    இசை:பாலமுரளி பாலு
    வெளியீட்டு தேதி:2024-02-02
    Points:406

    ட்ரெண்ட்

    வாரம்12
    தரவரிசை130137
    Point207199
    கரு

    வயது கோளாறால் திசைமாறும் பெண்கள் குறித்த கதை.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    மஞ்சிரா, நயன் கரிஷ்மா, அம்ரிதா, ஹால்டார் ஆகியோர் சிறு வயது முதலே ஒன்றாக படித்த பள்ளி தோழிகள். பள்ளி படிப்பை முடித்ததும் உயர்கல்விக்கு தயாராகிறார்கள். அதுமட்டுமல்லாமல் வயது கோளாறு காரணமாக காதல் டேட்டிங் என தனக்கு பிடித்த மாணவர்களுடன் சுற்றித் திரிகின்றனர்.

    ஆனால், இந்த விஷயம் அவர்களின் பெற்றோருக்கு தெரியாமல் பார்த்துக் கொள்கின்றனர். ஒரு நாள் பார்ட்டியில் பங்குபெறுவதற்காக தங்கள் பெற்றோரிடம் பொய் சொல்லிவிட்டு காரில் செல்கின்றனர். ஒரு கட்டத்தில் இவர்களது விவகாரம் பெற்றோருக்கு தெரிய வருகிறது.

    இறுதியில் உண்மை தெரிந்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை காப்பாற்றினார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    வயது கோளாறால் திசைமாறும் வாழ்க்கையில் சிக்கும் கதாபாத்திரத்தில் மூன்று பெண்களும் கதாபாத்திரமாக வாழ்ந்தது மட்டுமின்றி இரட்டை அர்த்தங்கள், கவர்ச்சி என அசத்தியுள்ளனர்.

    தனது பிள்ளைகள் திசை மாறி செல்வதை அறிந்து அவர்களை திருத்த நினைக்கும் பெற்றோர்களாக சுரேகாவானி, ஸ்ரீமன் ராஜகோபால் ஆகியோரின் நடிப்பு சமூகத்திற்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது. மூன்று பெண்களின் காதலர்களாக நடித்துள்ள சாத்விக், ஜாக் ராபின்சன் ஆகியோர் இளம் பெண்களுடன் நடத்தும் ரொமான்ஸ் இளைஞர்களுக்கு தரும் மயக்க மருந்து.

    இயக்கம்

    வயது கோளாறில் காதலிலும் காமத்திலும் சிக்கி வாழ்க்கை சீரழிந்து விடாமல் அதை கடந்து செல்லும் விழிப்புணர்வாக இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் முத்து. கவர்ச்சியும் இரட்டை அர்த்தங்களையும் கொஞ்சம் காட்சிகளில் குறைத்து இருக்கலாம்.

    இசை

    பால முரளி இசை படத்திற்கு பலம்.

    ஒளிப்பதிவு

    கொளஞ்சி குமாரின் கேமரா கதைக்கு ஏற்றபடி ஓடி விளையாடுகிறது.

    படத்தொகுப்பு

    விஜய் வேலுகுட்டி படத்தொகுப்பு ஓகே.

    புரொடக்‌ஷன்

    எஸ்.எஸ்.பி பிலிம்ஸ் நிறுவனம் ‘சிக்லெட்ஸ்’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.


    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×