என் மலர்tooltip icon
    < Back
    சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைவிமர்சனம் | Chennai City Gangsters Review in tamil
    சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைவிமர்சனம் | Chennai City Gangsters Review in tamil

    சென்னை சிட்டி கெங்ஸ்டர்ஸ்

    இயக்குனர்: விக்ரம் ராஜேஷ்வர்
    எடிட்டர்:சுரேஷ் ஏ பிரசாத்
    ஒளிப்பதிவாளர்:டிஜொ டாமி
    இசை:டி. இமான்
    வெளியீட்டு தேதி:2025-06-20
    Points:764

    ட்ரெண்ட்

    வாரம்12
    தரவரிசை278285
    Point353411
    கரு

    நகைச்சுவையான கும்பல் வங்கியை கொள்ளை அடிக்கும் கதை.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    லிவிங்ஸ்டனிடம் அடியாட்களாக வேலை செய்கிறார் நாயகன் வைபவ் மற்றும் மணிகண்டன். லிவிங்க்ஸ்டனுக்கு தலையாக இருக்கும் லீடர் அவரது வீட்டு பொருட்களை எல்லாம் கொள்ளை அடித்து செல்வதுப் போல் ஒரு போலி சம்பவத்தை நடத்த சொல்கிறார். அதன் பிறகு அவர் அந்த திருட்டை வைத்து இன்சுரென்ஸ் க்லெயிம் பண்ணிப்பதாக கூறுகிறார். இந்த திருட்டை வைபவ் மற்றும் மணிகண்டன் சேர்ந்து செய்கின்றனர். அதிலிருந்து எடுத்த பணப்பையை ஒரு இடத்தில் இடம் மாறிவிடுகிறது.

    இந்த பணத்தை உரிய நேரத்தில் கொடுக்காவிட்டால் லிவிங்ஸ்டன் குடும்பத்திற்கு பெரும் ஆபத்து ஏற்படும். அவரின் மகள் அதுல்யா ரவியை ஒருதலைப்பட்சமாக காதலிக்கும் வைபவ், அந்த பணத்தை எப்படியாவது திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று வித்தியாசமான குணாதிசயம் கொண்ட ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன், சுனில் ரெட்டி ஆகியோருடன் கூட்டணி சேருகிறார். இவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு வங்கியை கொள்ளையடிக்க திட்டமிடுகின்றனர். இறுதியில் அவர்கள் முயற்சி வெற்றி பெற்றதா? தொலைந்த பணம் கிடைத்ததா? இல்லையா? என்பதே சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் படத்தின் கதை.

    நடிகர்கள்

    படத்தின் நாயகனாக நடித்து இருக்கும் வைபவ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியாக நடித்து இருக்கும் அதுல்யா ரவி, அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்து இருக்கிறார். ஆனந்த் ராஜ், ராஜேந்திரன், சுனில், ரெடின் கிங்ஸ்லி என அனைவரும் கொடுத்த கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர்.

    இயக்கம்

    ஒரு வங்கி கொள்ளையை மையமாக வைத்து அதில் காமெடி காட்சிகளை வைத்து இயக்கி இருக்கிறார் இயக்குனர் விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ். படத்தில் காமெடி நடிகர்களிடம் சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். திரைக்கதையை சுவாரஸ்யமாக நகர்த்தி இருப்பது சிறப்பு.

    இசை

    டி இமானின் இசையில் அமைந்த பாடல்கள் கேட்கும் ரகம்.

    ஒளிப்பதிவு

    டிஜோ டாமியின் ஒளிப்பதிவு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியுள்ளது.

    தயாரிப்பு

    BTG Universal நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×