என் மலர்


சென்ட்ரல்
வறுமையின் காரணமாக சிறுவர்கள் வேலைக்கு சென்று கொத்தடிமைகளாக வாழ்கின்றனர் என்பதை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார்
கதைக்களம்
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த நாயகன் விக்னேஷ், 12ஆம் வகுப்பு தேர்வு எழுதி இருக்கிறார். இவரது தந்தை குடும்ப வறுமை காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மூட்டை தூக்கி கஷ்டப்பட்டு வருகிறார். குடும்ப வறுமையை போக்க இரண்டு மாத விடுமுறையில் வேலை செய்ய சென்னைக்கு செல்கிறார்.
சென்னைக்கு வந்த விக்னேஷ், தந்தையை சந்திக்க செல்கிறார். படிக்கும் வயதில் வேலைக்கு செல்ல வேண்டாம் என்று அவரை கண்டிக்கிறார். ஆனால், விக்னேஷ் இரண்டு மாதம் வேலைக்கு செல்கிறேன் என்று அடம்பிடிக்கிறார். அதனால் நண்பர் ஒருவர் மூலமாக சென்னையில் தாதாவாக இருக்கும் பேரரசு நடத்தி வரும் கம்பெனியில் வேலைக்கு சேர்கிறார் விக்னேஷ். அங்கு தொழிலாளர்கள் கொத்தடிமையாக இருப்பதையும் செய்யாத குற்றத்திற்கு அடி வாங்குவதையும் பார்க்கிறார் அதன் பின் தானும் ஒரு கொத்தடிமையாக மாறுகிறார்.
இறுதியில் விக்னேஷ், குடும்ப வறுமையை போக்க இரண்டு மாதம் வேலை செய்தாரா? கம்பெனியில் இருந்து தப்பித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
நாயகனாக நடித்திருக்கும் விக்னேஷ் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். குடும்ப சூழ்நிலை, வறுமை, தொழிலாளர்களின் வேதனை உணர்தல் என நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் சோனேஷ்வரிக்கு அதிகம் வேலை இல்லை. வில்லனாக மிரட்ட முயற்சி செய்து இருக்கிறார் பேரரசு. சித்தா தர்ஷனின் நடிப்பு செயற்கைதனமாக அமைந்துள்ளது.
இயக்கம்
வறுமையின் காரணமாக சிறுவர்கள் வேலைக்கு சென்று கொத்தடிமைகளாக வாழ்கின்றனர் என்பதை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் பாரதி சிவலிங்கம். தேவை இல்லாத காட்சிகள், லாஜிக் மீறல்கள், நீண்ட காட்சிகள் படத்திற்கு பலவீனம்.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளர் வினோத் காந்தியின் ஒளிப்பதிவு தேவையான அளவிற்கு அமைந்துள்ளது.
இசை
இசையமைப்பாளர் இலாவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை சம்மந்தம் இல்லாமல் சில இடங்களில் அதிமாக ஒலித்து இருக்கிறது.
தயாரிப்பு
Viyappiyan Devaraj ,satha Kumaraguru ,tamizh சிவலிங்கம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.










