search icon
என் மலர்tooltip icon
    < Back
    Boomer Uncle
    Boomer Uncle

    பூமர் அங்கிள்

    இயக்குனர்: ஸ்வதேஸ் எம்.எஸ்
    வெளியீட்டு தேதி:1991-04-29
    Points:860

    ட்ரெண்ட்

    வாரம்12
    தரவரிசை9990
    Point355505
    கரு

    தந்தை கண்டு பிடித்த கருவியை அடைய நினைக்கும் வெளிநாட்டு பெண், அதை தடுக்க போராடும் மகனின் கதை.

    விமர்சனம்

    கதைக்களம்

    நாயகன் யோகி பாபு வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து கேட்கிறார். ஆனால் அதை தர மறுக்கிறார். ஒரு கட்டத்தில் யோகி பாபுவின் அரண்மனையில் ஒரு நாள் தங்கி விட்டு விவாகரத்து தருகிறேன் என்று சொல்கிறார்.

    அதன்படி யோகி பாபு தன் வெளிநாட்டு பெண்ணை அழைத்துக் கொண்டு அரண்மனைக்கு செல்கிறார். அதே சமயம் யோகி பாபுவால் பாதிக்கப்பட்ட சேஷூ, தங்கதுரை, பாலா ஆகிய நண்பர்களும் ஊர் நாட்டாமை ரோபோ சங்கரும் அவரை பழிவாங்க அந்த அரண்மனைக்கு வருகிறார்கள்.

    அந்த அரண்மனையின் ஒரு மர்ம அறையில் யோகி பாபுவின் தந்தை மதன்பாபு கண்டு பிடித்த கருவி ஒன்று இருப்பதை அறிந்து அதை எடுக்க முயற்சி செய்கிறார்.

    இறுதியில் வெளிநாட்டு பெண் யோகி பாபுவின் தந்தை கண்டுபிடித்த கருவியை எடுத்தாரா? யோகி பாபு அதை தடுத்தாரா? வெளிநாட்டு பெண்ணின் நோக்கம் என்ன? யோகி பாபுவை பழிவாங்க வந்த நண்பர்கள் என்ன ஆனார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் யோகி பாபு முழு கதையையும் தன் தோளில் தாங்கி நிற்கிறார். தனக்கே உரித்தான டைமிங் காமெடியில் ஸ்கோர் செய்து இருக்கிறார். ஆக்ஷன் நடிகையாக அசத்தி இருக்கிறார் ஓவியா. அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார்.

    சேஷூ, தங்கதுரை, பாலா, ரோபோ சங்கர் ஆகியோர் காமெடியில் ஆங்காங்கே சிரிக்க வைத்து இருக்கிறார்கள். இடைவெளிக்கு பிறகு இவர்கள் சூப்பர் ஹீரோவாக வந்து குழந்தைகளை சிரிக்க வைத்து இருக்கிறார்கள்.

    குழந்தைகளை மகிழ்விக்கும் நோக்கத்தில் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் சுவாதேஸ். ஆனால் மற்றவர்களுக்கு படம் பிடிப்பது சந்தேகம். ஒரு சில இடங்களில் காமெடி பெரியதாக எடுபடவில்லை. திரைக்கதையில் கொஞ்சம் சுவாரஸ்யம் இருந்திருந்தால் கூடுதலாக ரசித்து இருக்கலாம். KGF ஸ்டைலில் சேஷூ கதை சொல்லும் விதம் அருமை.

    இசை

    சந்தன் மற்றும் தர்ம பிரகாஷ் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசையில் கவனிக்க வைத்து இருக்கிறார்கள். குறிப்பாக ஓவியாவின் பின்னணி இசை ரசிக்கும் படி உள்ளது.

    ஒளிப்பதிவு

    சுபாஷ் தண்டபாணியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். கிராபிக்ஸ் காட்சிகள் ஒரு சில இடங்களில் பிரம்மாண்டம்.

    தயாரிப்பு

    கார்த்திக் கே தில்லை பூமர் அங்கிள் படத்தை தயாரித்துள்ளார்.

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×