என் மலர்


பிளாக்
புது வில்லாவிற்கு சென்ற ஜீவா மற்றும் பிரியா பவானி சங்கர் இருவரும் டைம் லூப்பில் மாட்டிக் கொள்ளும் கதை.
கதைக்களம்
ஜீவாவும், பிரியா பவானி சங்கரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வருகிறார்கள். இருவரும் விடுமுறையை கழிக்க சொந்தமாக வாங்கி இருக்கும் புது வில்லாவிற்கு செல்கிறார்கள். பல வீடுகள் உள்ள அந்த குடியிருப்பில் இருந்தாலும் யாரும் குடியேறாமல் இருக்கிறார்கள்.
சில நிமிடங்களில் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. ஜெனரேட்டரை ஆன் செய்வதற்காக ஜீவாவும், பிரியா பவானி சங்கரும் வெளியே வந்து மீண்டும் வீட்டுக்குள் நுழையும் போது, அவர்கள் எதிர் வீட்டில் விளக்குகள் எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள்.
யாரும் இல்லாத வீட்டில் எப்படி விளக்குகள் எரிகிறது என்ற யோசனையோடு இருவரும் அந்த வீட்டின் அருகே சென்று பார்க்கும் போது, இவர்களைப் போல உருவம் கொண்டவர்கள் இருக்கிறார்கள். இதைப் பார்த்ததும் குழப்பம் அடையும் இவர்கள் இந்த வில்லாவை விட்டு செல்ல முயற்சி செய்கிறார்கள். ஆனால் செல்ல முடியவில்லை.
இறுதியில் ஜீவா, பிரியா பவானி சங்கர் இருவரும் அந்த வில்லாவை விட்டு வெளியேறினார்களா? அந்த வில்லாவில் நடக்கும் மர்மம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஜீவா, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தன்னை சுற்றி நடக்கும் மர்மத்திற்கு விடை தேடி அலையும் காட்சியில் கவனிக்க வைத்து இருக்கிறார். இவருக்கு மனைவியாக நடித்து இருக்கும் பிரியா பவானி சங்கர், போட்டி போட்டு நடித்து இருக்கிறார். பயம், பதட்டம் என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். விவேக் பிரசன்னா, ஷா ரா ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.
இயக்கம்
டைம் லூப் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் பாலசுப்ரமணி. இரண்டு பேரை மட்டுமே வைத்து திரைக்கதையை நகர்த்திய இயக்குனருக்கு பாராட்டுகள். டைம் லூப் கதையை கையாள்வது மிகவும் கடினம். அதை ஓரளவிற்கு சிறப்பாகவே கையாண்டு இருக்கிறார். ஆனால், கிளைமாக்ஸ் காட்சியில் அந்த டைம் லூப்பை சரியாக சொல்லவில்லை.
இசை
சாம்.சி.எஸ் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். சாதாரண காட்சியை கூட இசையால் மிரட்டி இருக்கிறார்.
ஒளிப்பதிவு
அதிகம் இருட்டு காட்சிகளை ஒளிப்பதிவாளர் கோகுல் பினோய் கச்சிதமாக படம்பிடித்து பயமுறுத்தி இருக்கிறார்.
தயாரிப்பு
பொடன்சியல் ஸ்டூடியோஸ் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.











