என் மலர்


பைரதி ரணகல்
மஃப்டி திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் உருவாகியுள்ளது
கதைக்கரு
சிவராஜ்குமார் சிறு வயதில் இருந்தே ஒரு புரட்சியாளராக தன்னுடைய கிராம மக்களுக்கு உதவி செய்து வருகிறார். கிராம மக்களுக்கு ஏற்படும் அநியாயங்களை அரசாங்கத்தின் வெளிச்சத்திற்கு கொண்டு வரும் முயற்சியில் ஒரு அரசாங்க அலுவலகத்தை வெடிகுண்டு வைத்து வெடிக்க வைக்கிறார். இந்த செயலுக்காக 22 வருடங்கள் சிறையில் இருக்கிறார். சிறையில் வக்கீலுக்கு படித்து வெளியே வரும் போது ஒரு வக்கீலாக வருகிறார்.
இவர் இருக்கும் ஊரில் குவாரி நடத்தி வரும் வில்லனுடன் சிவராஜ்குமாருக்கு பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் சிவராஜ்குமார் என்ன ஆனது? கிராம மக்கள் பிரச்சனையை சரி செய்தாரா? என்பதே படத்தின் மீதிக் கதை.
நடிகர்கள்
வழக்கம் போல் அசாதரண நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் சிவராஜ்குமார். ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டியுள்ளார். வசனங்களில் பார்வையாளர்களின் கைத்தட்டலை பெறுகிறார். ருக்மணி வசந்த் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார்.
இயக்கம்
ஒரு கமெர்ஷியன் ஆக்ஷன் கதையாக வடிவமைத்துள்ளார் இயக்குனர் நர்தன். லாஜிக்கை கண்டுக்கொள்ளாமல் திரைப்படத்தை பார்த்தால் ரசிக்கும்படியாக இயக்கியுள்ளார். முதல் பாதி திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்திருக்கலாம்.
இசை
ரவி பஸ்ரூர் பின்னணி இசை திரைக்கதைக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
ஒளிப்பதிவு
நவீன் குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். ஆக்ஷன் காட்சிகளில் சிறப்பான ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார்.
தயாரிப்பு
கீதா பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.









