என் மலர்


பெல்
பழந்தமிழர் மருத்துவத்தை வைத்து பணம் சம்பாதிக்க நினைப்பவரை தடுப்பது குறித்த கதை.
பெல்
கதைக்களம்
பழந்தமிழர் மருத்துவத்தில் சிறந்து விளங்கிய அகத்தியரின் இரகசிய மருத்துவக்குறிப்புகளில் ஒன்றான நிசம்ப சூதனி என்ற மருந்தை பாதுகாத்து வருகிறார் ஶ்ரீதர்.
இந்த நிசம்ப சூதனி மருந்தை கண்டுபிடித்து வெளிநாடுகளுக்கு விற்று பணம் சம்பாதிக்க நினைக்கிறார் குரு சோமசுந்தரம். இதற்காக பல சூழ்ச்சிகள் செய்து ஸ்ரீரிதரிடம் இருந்து அந்த மருந்தை கைப்பற்ற நினைக்கிறார் குரு சோமசுந்தரம்.
இறுதியில் ஸ்ரீரிதரிடம் இருந்து நிசம்ப சூதனி மருந்தை குரு சோமசுந்தரம் கைப்பற்றினாரா? நிசம்ப சூதனி மருந்தை ஶ்ரீதர் பாதுகாக்க காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் நடன இயக்குனர் ஸ்ரீதர், யதார்த்தமாக நடித்து ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். இவருக்கு இணையாக மற்றோரு நாயகனாக நடித்து இருக்கும் நித்தீஷ் சிறப்பாக நடித்து இருக்கிறார். வில்லனாக மிரட்ட முயற்சி செய்து இருக்கிறார் குரு சோமசுந்தரம். மற்ற கதாபாத்திரங்கள் நடித்திருந்தாலும் பெரியதாக கவரவில்லை.
இயக்கம்
பழங்கால மருத்துவத்தின் அவசியத்தையும், பெருமையையும் வைத்து படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் வெங்கட்புவன். ஶ்ரீதர், நித்தீஷ் வீரா, குரு சோமசுந்தரம் ஆகியோரிடம் திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். மற்ற கதாபாத்திரங்களுக்கு பல காட்சிகள் வேண்டுமென்றே வைத்தது போல் இருக்கிறது.
இசை
இராபர்ட்டின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
ஒளிப்பதிவு
மலைகள் சூழ்ந்த இயற்கைச் சூழலே கதைக்களம் என்பதால் காட்சிகள் பசுமையாக அமைத்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் பரணிகண்ணன்.
படத்தொகுப்பு
தியாகராஜன் படத்தொகுப்பு ஓகே.
புரொடக்ஷன்
புரோகன் நிறுவனம் ‘பெல்’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.










