என் மலர்


பேட் பாய்ஸ் : ரைட் ஆர் டை
கதைக்களம்
‘பேட் பாய்ஸ்’ பட வரிசையில் நான்காவது பாகமான இது, ‘பேட் பாய்ஸ் ஃபார் லைஃப் (2020)’ படத்தின் தொடர்ச்சியாகும். மியாமியில் உள்ள டாப் டிடெக்ட்டிவாக இருக்கின்றனர் நெருங்கிய நண்பர்களான வில் ஸ்மித் மற்றும் மார்டின் லாரன்ஸும். இவர்களுக்கு மிகவும் நெருக்கமாகவும், வழிகாட்டயாகவும் இருந்த கேப்டன் ஹார்வர்ட் கடந்த பாகத்தில் கொல்லப்படுகிறார்.
அவர் மீது தேச துரோகி, மனி லாட்னரிங் வழக்கு, போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருக்கிறது என அடுக்கடுக்கான வழக்குகளை கேப்டன் ஹார்வர்ட் மீது சுமத்தப்படுகிறது. ஆனால் அவர் அப்படிபட்ட நபர் இல்லையென கதாநாயகர்களான வில் ஸ்மித் மற்றும் மார்டினுக்கு தெரியும். இதனால் அவர் பக்கம் இருக்கும் நியாயத்தை நிலை நிறுத்தவும், அவர் கொலைக்கு பின் யார் இருக்கிறார்கள் என கண்டறியும் பணியில் நாயகன் இருவரும் இறங்குகின்றனர். அதற்கு அடுத்து என்ன நடந்தது ? இவர்கள் கேப்டன் இறப்புக்கு காரணமானவர்களை கண்டுபிடித்தார்களா? கண்டுப்பிடிக்கும் போது ஏற்பட்ட பிரச்சனை என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
கதாநாயகர்களான வில் ஸ்மித் மற்றும் மார்டின் லாரன்சும் மிக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ஆக்ஷன், ஸ்டண்ட் என மிரட்டியுள்ளனர். இவர்களுக்கு இடையே இருக்கும் கெமிஸ்டிரி மிக அழகாக வொர்க் அவுட் ஆகியுள்ளது. இவர்களை தவிர மற்ற நடிகர்கள் அவர்களுக்கான வேலையை ஒழுங்காக பார்த்திருக்கின்றனர்.
இயக்கம்
இந்த பாகத்தை அடில் எல் அர்பி மற்றும் பிலால் ஃபல்லா இயக்கியுள்ளனர். சென்ற பாகத்தை போல இந்த பாகத்தையும் சிறப்பாக இயக்கியுள்ளனர். பேட் பாய்ஸ் படத்தில் என்னென்ன அம்சங்கள் இருக்குமோ அதை அனைத்தும் குறைவில்லாமல் கொடுத்துள்ளனர். ஆக்ஷன், காமெடி மற்றும் விறுவிறுப்பான காட்சிகளை கொடுத்துள்ளார் இயக்குனர். பேட் பாய்ஸ் ஃப்ரான்சிஸ் திரைப்படங்களில் இந்த பாகமே மிக சிறப்பாக அமைந்துள்ளது. தமிழ் டப்பிங் இப்படத்தில் செம்மையாக செய்துள்ளனர். காமெடி காட்சிகளில் வரும் வசனங்கள் மக்களை ரசிக்க வைத்துள்ளது.
இசை
லார்னே பல்ஃபேவின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம்.
ஒளிப்பதிவு
ராப்ரெக்ட் ஹெய்வார்ட் படத்தின் ஆக்ஷன் காட்சிகளை மிக விறுவிறுப்பாகவும், வித்தியாசமான கேமரா ஆங்கிளில் எடுத்து பிரமிக்க வைத்துள்ளார்.
தயாரிப்பு
சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மண்ட் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது.









