என் மலர்


பேபி & பேபி
இரு குடும்பளுக்கு இடையே மாறிய குழந்தை பற்றிய கதை
கதைக்களம்
பெற்றோரை எதிர்த்து பிரக்யாவை காதல் திருமணம் செய்துக் கொள்கிறார் ஜெய். இவர்கள் துபாயில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. இதனை தெரிந்துக் கொண்ட ஜெய் வீட்டார் அந்த குழந்தையை பார்க்க வேண்டும் என ஊருக்கு அழைக்கின்றனர். இதனால் கோவைக்கு கிளம்புகிறார் ஜெய்.
மறுபக்கம் யோகி பாபு தன் அப்பாவின் தொல்லை தாங்கமுடியாமல் துபாயில் வாழ்ந்து வருகிறார். அங்கு சாய் தன்யா என்ற பெண்ணை திருமணம் செய்துக் கொள்கிறார். யோகி பாபு தம்பதிகளுக்கு பெண் குழந்தை பிறக்கிறது. இவர் குழந்தையுடன் மதுரைக்கு கிளம்புகிறார். இந்த நிலையில் விமான நிலையத்தில் ஜெய் மற்றும் யோகி பாபுவின் குழந்தைகள் எதிர்ப்பாராத விதமாக ப மாறி விடுகின்றன. இவர்கள் இரண்டு வீட்டிலும் குழந்தைகள் மாறியதை தெரியாமல் மறைக்க முயற்சி செய்கின்றனர். இதற்கு அடுத்து என்ன ஆனது? குழந்தைகளை மீண்டும் கண்டுபிடித்தார்களா? குழந்தைகள் மாறியதால் குடும்பத்துக்குள் என்ன பிரச்சனை ஏற்பட்டது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
ஜெய் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். யோகி பாபு காமெடி சில இடத்தில் வொர்க் அவுட் ஆகியுள்ளது. பிரக்யா நக்ரா மற்றும் சாய் தன்யா அளவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். குழந்தையை பிரிந்து இருக்கும் காட்சிகளில் மிகவும் எமோஷனலான நடிப்பை திரையில் பதிவிட்டுள்ளனர். படத்தில் நடித்த சத்யராஜ், கீர்த்தனா, இளவரசு, ஸ்ரீமன், ஆனந்த்ராஜ், நிழல்கள் ரவி, சிங்கம்புலி, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், ஆர்.ஜே விக்னேஷ்காந்த், ராமர், என அனைவருமே கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.
இயக்கம்
இரு குடும்பத்துக்கும் இடையே குழந்தை மாறிய கதையை நகைச்சுவையான கதைக்களத்துடம் சொல்ல முயற்சித்துள்ளார் இயக்குனர் பிரதாப். நகைச்சுவை காட்சிகள் பல இடத்தில் சொதப்பியுள்ளது. தேவையில்லாத காட்சிகளை தவிர்த்து இருக்கலாம்.படத்தின் இரண்டாம் பாதை கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். இரண்டாம் பாதியில் இடம் பெற்றுள்ள காட்சிகளில் டான்ஸ் ஆடுவது, பாடல் பாடுவது, குழந்தையின் தந்தை ஆனந்தமாக ஜூஸ் குடிப்பது எல்லாம் பார்வையாளர்களின் பொறுமையை சோதிக்கிறது.
இசை
டி.இமானின் இசை சுமார் ரகம். ஆராஅமுதே பாடல் மட்டும் நம்மை தாளம் போட வைக்கிறது. பின்னணி இசையும் பெரிதாக் எடுப்படவில்லை.
ஒளிப்பதிவு
டி.பி சாரதி ஒளிப்பதிவு படத்தின் பலமாக அமைந்துள்ளது.
தயாரிப்பு
Yuvaraj Films நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.












