என் மலர்


அது வாங்குனா இது இலவசம்
சட்டம் தண்டிக்கவில்லை என்றாலும், அவர்களின் தவறுக்காக நிச்சயம் தண்டனை கிடைக்கும் என்பதை மையமாக வைத்து இயக்கப்பட திரைப்படம் .
கதைக்களம்
படத்தின் நாயகனான ராமர், தனது இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து திருட்டு சம்பவங்களில் ஈடுப்படுவதும், சிறை சென்று வருவது என்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.
மறுபக்கம் நான்கு இளைஞர்கள் இளம்பெண்களை கடத்திச் சென்று கற்பழித்து அவர்களை கொடூரமாக கொலை செய்கிறார்கள். இதனைக் கண்டுக்கொள்ளாமல் இருக்கும் காவல்துறை அதிகாரி, லஞ்சம் வாங்கிக் கொண்டு குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
ராமரும், அவரது நண்பர்களும் விளையாட்டுத்தனமாக செய்யும் தவறுகள் மற்றும் குற்ற செயலால் பலரும் பாதிக்கப்பட்டாலும். அதனை அவர்கள் கண்டுக்கொள்ளாமல் மகிழ்ச்சியாக அடாவடித்தனத்தை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஊரில் தவரு செய்பவர்களை நாயகி பூஜாஸ்ரீ தண்டிக்கிறார். இதற்கு அடுத்து என்ன ஆனது? எதற்காக பூஜா ஸ்ரீ இப்படி செய்கிறார்? ராமர் குழு என்ன ஆனது இதனால்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
கதையின் முதன்மை கதாபாத்திரத்தில் வில்லத்தனம் கலந்து நடித்திருக்கும் ராமர், படம் முழுவதும் பார்வையாளர்களை சிரிக்க வைக்க முயற்சித்துள்ளார். குறிப்பாக பெண் வேடம் அணிந்து வரும் காட்சிகள் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
நாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை பூஜாஸ்ரீ, கொடுத்த வேலையை நிறைவாக செய்திருக்கிறார். அழகான பெண்ணாக எண்ட்ரி கொடுப்பவர் எதிர்பாரத விதத்தில் அதிரடியான சம்பவங்களை செய்து ரசிகர்களை பதற்றமடைய செய்துவிடுகிறார்.
கலையரசன், சூப்பர் குட் சுப்பிரமணி, மாரிஸ் ராஜா, சம்பத், மீசை ரமேஷ், அருண், அம்மையப்பன் பாலாஜி என்று மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாகவும், திரைக்ககதைக்கு உயிரோட்டம் அளிக்கும் வகையிலும் நடித்திருக்கிறார்கள்.
இயக்கம்
எஸ்.கே.செந்தில் ராஜன், தவறு செய்தவர்களை சட்டம் தண்டிக்கவில்லை என்றாலும், அவர்களின் தவறுக்காக நிச்சயம் தண்டனை கிடைக்கும், என்ற மெசஜை நகைச்சுவையாக சொல்ல முயற்சித்திருக்கிறார்.
இளம்பெண்களை கடத்தி கற்பழித்து கொடூரமாக கொலை செய்யும் கும்பல், காதலர்களின் படுகொலை என்று படத்தின் ஆரம்பம் வேகமாக செல்கிறது . ஒரு சிலர் செய்யும் தவறுகளால் மற்றவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள், என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
கொஞ்சம் கதை சொல்லல், திரைக்கதை மற்றும் மேக்கிங் ஆகியவற்றிலும் கூடுதல் கவனம் செலுத்திருக்க வேண்டும் .
இசை
அர்வின் ராஜ் இசை கேட்கும் ரகம். பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளர் விக்னேஷ் மலைச்சாமியின் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகள் தரமாகவும், அழகாகவும் இருக்கிறது.
தயாரிப்பு
A Sreeja Cinemas நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.









