என் மலர்


அப்பு VI STD
படிப்புக்காக ஏங்கும் பலரின் பிரதிபலிப்பாக அப்பு 6-ம் வகுப்பு திரைப்படம் உருவாகி இருக்கிறது.
கதைக்களம்
தாயாரை இழந்த நிலையில் கூலி தொழிலாளியான தந்தை வசீகரன் பாலாஜி அரவணைப்பில் வளர்ந்து வருகிறான் 6-ம் வகுப்பு பள்ளி மாணவன் ஜீவன் பிரபாகர்.
படிப்பில் ஆர்வத்தை கொண்ட மகனை உயர்ந்த நிலைக்கு கொண்டு வர வேண்டும் என கடுமையாக உழைத்து வருகிறார் வசீகரன் பாலாஜி. இந்நிலையில் எதிர்பாராத விதமாக காற்றாடி நூல் கழுத்தை அறுத்து வசீகரன் பாலாஜி மரணமடைகிறார்.
தந்தையும் தாயும் இல்லாமல் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டதுடன், தான் தங்கி இருந்த வீட்டையும் தந்தையின் நண்பர் அபகரித்து விட நடுத்தெருவுக்கு வந்து விடுகிறான் ஜீவன் பிரபாகர்.
இறுதியில் ஜீவன் பிரபாகர் கல்விக்கனவு நிறைவேறியதா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தின் மொத்த கதையும் சிறுவன் ஜீவன் பிரபாகரை சுற்றியே நகர்கிறது. தாய் தந்தையை இழந்து ஆதவற்றவராக தவிக்கும் காட்சிகளிலும், பலரால் ஏமாற்றப்படுவதும் இறுதிக்காட்சியில் எதிர்பாராத திருப்பத்தை தரும் காட்சிகளிலும் சிறுவன் ஜீவன் பிரபாகரின் நடிப்பு பாராட்ட வைக்கிறது.
காதல் திருமணம் செய்து மனைவி மரணமடைந்ததும் அவரது வாழ்க்கை பாதை ரவுடியாக மாறுவதும் என நடிப்பில் கவனம் ஈர்க்கிறார் கல்லூரி வினோத்.
போலீஸ் கமிஷனராக வரும் தேனப்பன், இன்ஸ்பெக்டராக வரும் விஜய் சத்யா மற்றும் வேலுபிரபாகரன் அனுபவ நடிப்பை கொடுத்துள்ளனர். மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.
இயக்கம்
சமூகத்தில் உள்ள பல குழந்தைகள் ஏக்கத்தை, விழிப்புணர்வு கலந்து திரில்லர் படமாக கொண்டு வந்துள்ளார் இயக்குனர் வசீகரன் பாலாஜி. அடிக்கடி காட்சிகளில் மாற்றம் தடுமாற்றத்தை கொடுப்பது பலகீனம். படிப்புக்காக ஏங்கும் பலரின் பிரதிபலிப்பு அப்பு 6-ம் வகுப்பு.
இசை
ஆலன் விஜய் இசையில் பாடல்கள் சுமார் ரகம். தீபக் ஒளிப்பதிவு பெரியதாக எடுபடவில்லை.
ஒளிப்பதிவு
தீபக்கின் ஒளிப்பதிவு பெரிதாக கவரவில்லை
தயாரிப்பு
ஆர் கே கிரியேட்டிவ் மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.







