search icon
என் மலர்tooltip icon
    < Back
    Amigo Garage
    Amigo Garage

    அமிகோ கேரேஜ்

    இயக்குனர்: பிரசாந்த் நாகராஜன்
    ஒளிப்பதிவாளர்:விஜயகுமார் சோலைமுத்து
    இசை:பாலமுரளி பாலு
    வெளியீட்டு தேதி:2024-03-15
    Points:146

    ட்ரெண்ட்

    வாரம்12
    தரவரிசை233188
    Point42104
    கரு

    ஒரு சாதாரண வாலிபர் நியாயமான கோபத்தால் ஏற்படும் விளைவுகளை மையமாக வைத்து எடுக்கபட்ட படம்.

    விமர்சனம்

    கதைக்களம்

    நாயகன் மகேந்திரன் பள்ளி பருவத்தில் இருந்து நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டு ஜாலியாக இருக்கிறார். ஒரு நாள் ஆசிரியர் மகேந்திரனை அடித்துவிடுவதால் வருத்தப்பட்டு, அதே ஏரியாவில் கேரேஜ் வைத்துக் கொண்டு போதை பொருள் விற்று வரும் ஜி.எம்.சுந்தரிடம் சொல்லுகிறார். ஜி.எம்.சுந்தர் அந்த ஆசிரியரை தூக்கி வந்து அடிக்கிறார்.

    அதிலிருந்து ஜி.எம்.சுந்தருடன் மகேந்திரனுக்கு பழக்கம் ஏற்படுகிறது. அடிக்கடி அவரது கேரேஜ்க்கு சென்று வருகிறார். அதே ஊரில் பெரிய தாதாவுக்கு அடியாளாக இருக்கும் தாசரதி நரசிம்மன், மது போதையில்  மகேந்திரன் பைக்கை எட்டி உதைக்கிறார். இதைப் பார்த்த மகேந்திரன், தாசரதி நரசிம்மனை  அடித்து விடுகிறார். இதனால் கோபமடையும் தாசரதி நரசிம்மன், மகேந்திரனை பழிவாங்க திட்டம் போடுகிறார்.

    இறுதியில் தாசரதி நரசிம்மன், மகேந்திரனை பழி வாங்கினாரா? தாசரதி நரசிம்மனிடம் இருந்து மகேந்திரன் தப்பித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் மகேந்திரன், காதல், ஆக்ஷன், காமெடி, சென்டிமென்ட் என அனைத்திலும் நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியாக நடித்து இருக்கும் அதிரா ராஜ் மற்றும் தீபா பாலு ஆகியோருக்கு படத்தில் பெரியதாக வேலை இல்லை. கேரேஜ் ஓனராக வரும் ஜி.எம்.சுந்தர், சிறு வயது பசங்களை கூட வைத்துக் கொண்டு ஜாலியாக நடித்து இருக்கிறார். இவரது நடிப்பு படத்திற்கு பெரிய பலம். வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார் தாசரதி நரசிம்மன். இவரது உடலமைப்பு, பார்க்கும் பார்வை பிளஸ் ஆக அமைந்து இருக்கிறது. மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.

    இயக்கம்

    ஒரு சாதாரண வாலிபர் நியாயமான கோபத்தால் ஏற்படும் விளைவுகளை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் பிரசாந்த் நாகராஜன். இந்த கதை வைத்து பல படங்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால் இப்படத்தில் கொஞ்சம் வித்தியாசம் காண்பிக்க முயற்சி செய்து இருக்கிறார் இயக்குனர். லாஜிக் மிரல்கள், மகேந்திரனின் பள்ளி பருவம், கல்லூரி, வாலிபர் என வித்தியாசம் காண்பிக்காமல் இயக்கியிருப்பது படத்திற்கு பலவீனம்.

    இசை

    பாலமுரளி பாலுவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. விஜயகுமார் சோலைமுத்துவின் ஒளிப்பதிவு சிறப்பு.

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×