என் மலர்


ஏலியன்: ரோமுலஸ்
ஏலியனிடம் மாட்டிக் கொள்ளும் நண்பர்களின் கதை
கதைக்களம்
ஒரு தனிப்பட்ட கிரகத்தில் வாழ்ந்து வருகிறார் கதாநாயகியான கெய்லி. இவர்கள் வாழும் கிரகத்தில் சூரியனே கிடையாது இதனால் இருட்டிலே வாழும் ஒரு மனிதர்களாகவே இவர்கள் இருக்கின்றனர். கதாநாயகிக்கும் அவரது நண்பர்களுக்கும் எப்படியாவது இந்த கிரகத்தில் இருந்து தப்பித்து பூமியைப் போல வாழ்வாதாரம் மிக்க சூரியன் உள்ள ஒரு கிரகத்துக்கு புலம் பெயர்ந்து போக வேண்டும் என்பது ஆசை. அப்படி ஒரு கிரகம் இருப்பது இவர்களுக்கு தெரிய வருகிறது. ஆனால் அவர்கள் அங்கு செல்ல 9 வருடங்கள் ஆகும். இதனால் கைரோ ஸ்லீப் என்ற முறையில் தூங்கிக் கொண்டு சென்றால் மட்டுமே இது சாத்தியமாகும். ஆனால் அதற்கு பயன்படும் உபகரணங்கள் இவர்களிடம் குறைவாகவே இருக்கிறது.
இவர்கள் தற்பொழுது இருக்கும் கிரகத்திற்கு மேலே ஒரு ஆளில்லா ஸ்பேஸ்ஷிப் ஒன்று உளாவிக் கொண்டே இருக்கிறது அங்கு சென்றால் நமக்கு தேவையானது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் செல்கின்றனர். அங்கு சென்று பார்த்தால் 3 ஆண்டுகளுக்கு தேவையான எரிப்பொருள் மட்டுமே இருக்கிறது. மீதம் தேவையான எரிப்பொருளை அங்கு தேடுகின்றனர் அப்பொழுது எதிர்பாராத விதமாக அந்த ஸ்பேஸ் ஷிப்பில் உள்ள ஏலியனை விடுவித்து விடுகின்றனர். இதற்கடுத்து என்ன ஆனது? இவர்கள் எப்படி அங்கிருந்து தப்பித்தார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
கதாநாயகியான கெய்லி மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஏலியனிடம் இருந்து தப்பிக்கும் காட்சிகளில் நடிப்பில் ஸ்கோர் செய்துள்ளார் கெய்லி. நண்பர்களாக நடித்த டேவிட் மற்றும் ஆர்சி கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.
இயக்கம்
ஒரு தெளிவான ஏலியன் திரைப்படத்தை இயக்கியுள்ளார் ஃபெடே ஆல்வரஸ். காட்சியமைப்பிலும் திரைக்கதையிலும் மிகவும் நேர்த்தியாக இயக்கியுள்ளார். மிகவும் நம்பகத்தன்மையுடன் படத்தை இயக்கியுள்ளார்.
ஒளிப்பதிவு
காலோ ஒலிவர்ஸ் மிகவும் அழகாக அந்த இரவு கிரகத்தை பிரதிபளித்து காட்சிபடுத்தியுள்ளார். திரைக்கதை ஓட்டத்திற்கு இவரது ஒளிப்பதிவு மிகவும் உதவியுள்ளது.
இசை
ஆடம்ஸின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம்.
தயாரிப்பு
20 th செண்ட்சூரி ஸ்டூடியோஸ் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.








