என் மலர்


அஃகேனம்
பெண்களை கடத்தும் கும்பலை பழிவாங்கும் கதை.
கதைக்களம்
கதாநாயகியான கீர்த்தி பாண்டியன் டாக்ஸி டிரைவராக பணிப்புரிந்து வருகிறார். அருண் பாண்டியன் சிறையில் தண்டனை கைதியாக இருக்கிறார்.
மறுப்பக்கம் ஒரு கும்பல் ஐடி துறையில் வேலைப்பார்க்கும் நடுத்தர குடும்ப பெண்களை கடத்தி வருகின்றனர். ஒரு நாள் இந்த கும்பலை பற்றிய தகவல் கீர்த்தி பாண்டியனுக்கு தெரியவர அவர் அதை போலீசில் தெரிவித்து விடுகிறார். இந்த கும்பலின் முகத்திரையை கிழித்ததால் கீர்த்தி பாண்டியனை கொலை செய்ய அந்த கும்பல் சுற்றுகிறது. இந்த கும்பலை பிடிக்க காவல் அதிகாரியும் தேடி வருகிறார்.
மேலும் தண்டனை முடிந்து அருண் பாண்டியன் சிறையிலிருந்து விடுதலை பெற்று இந்த கும்பலை கொலை செய்யவும் மற்றும் கீர்த்தி பாண்டியனை சந்திக்க வருகிறார். இதற்கு அடுத்து என்ன ஆனது? அருண் பாண்டியனுக்கு அந்த கும்பலுக்கு என்ன தொடர்பு? ஏன் அருண் பாண்டியன் சிறையில் இருக்கிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
டாக்ஸி டிரைவர் கதாப்பாத்திரத்தை மிகவும் நம்பும் விதமாக நடித்துள்ளார் கீர்த்தி பாண்டியன். அருண் பாண்டியன் ஒரு தந்தை கதாப்பாத்திரத்தில் அவரது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
வில்லனாக வரும் ஆதித்ய ஷிவ்பிங் மற்றும் மற்ற நடிகர்களான ஆதித்ய மேனன், பிரவீன் ராஜா, ரமேஷ் திலக், ஜி.எம்.சுந்தர், சீதா, நம்ரிதா அளவான நடிப்பை அழகாக வெளிப்படுத்தியுள்ளனர்.
இயக்கம்
ஒரு திரில்லர் திரைப்படத்தை இயக்க முயற்சித்துள்ளார் இயக்குநர் உதய் கே. காட்சியமைப்பில் மற்றும் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்திருக்கவேண்டும் அது இல்லாதது படத்தின் பலவீனமாக அமைந்துள்ளது
ஒளிப்பதிவு
விக்னேஷ் கோவிந்தராஜனின் ஒளிப்பதிவு படத்தின் திரையோட்டத்த்ற்கு பெரிதும் உதவியுள்ளது.
இசை
பரத் வீரராகவன் பின்னணி இசை மற்றும் பாடல்கள் கேட்கும் ரகம்.
தயாரிப்பு
A & P Groups நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.









