என் மலர்


அக்கரன்
காணாமல் போன மகளை தேடும் தந்தையின் போராட்டம் பற்றிய கதை.
கதைக்களம்
எம்.எஸ்.பாஸ்கருக்கு வெண்பா, பிரியதர்ஷினி என்ற இரண்டு மகள்கள். இரண்டாவது மகளான பிரியதர்ஷினி மருத்துவ படிப்பிற்காக நீட் பயிற்சி வகுப்பில் படித்து வருகிறார். அங்கு சில விஷ்யங்கள் சரியில்லை என்று தன் அக்காவிடம் கூறுகிறார். ஆனால் அவளின் அக்கா அதற்கு செவி சாய்க்காமல் ஒழுங்காக படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என கூறிவிடுகிறார். இந்நிலையில் ஒரு நாள் நீட் பயிற்சி வகுப்பு சென்ற பிரியதர்ஷினி வீடு திரும்பவில்லை. அவரை தேடுவதற்கான முயற்சிகளில் எம்.எஸ் பாஸ்கர் ஈடுப்படுகிறார்.
அதற்கடுத்து என்ன நடந்தது? பிரியதர்ஷினிக்கு என்ன ஆனது? நீட் பயிற்சி வகுப்பில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தின் கதையை சுமந்து கொண்டு குற்றச்செயல்களில் ஈடுபட்டோரிடம் இருந்து உண்மையை வரவழைக்க சித்ரவதை செய்வதும், கொலையுண்ட மகளை நினைத்து ஏங்கி கதறி அழுவது என யதார்த்த நடிப்பால் மிரள வைத்துள்ளார் எம்.எஸ்.பாஸ்கர்.
வில்லன்களை புரட்டி எடுக்கும் ஆக்ஷன் ஹீரோவாக எம்.எஸ்.பாஸ்கர் காட்சிகள் மிரட்டல். காட்சிகள் நம்ப முடியாமல் இருந்தாலும் கிளைமாக்சில் நியாயப்படுத்தப்பட்டுள்ளது.
வில்லன் கதாபாத்திரத்தில் ஆகாஷ் பிரேம் குமார், கார்த்தி சந்திரசேகர், அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நமோ நாராயணன் ஆகியோர் நடிப்பில் கவனம் ஈர்க்கின்றனர். வெண்பா, பிரியதர்ஷினி நடிப்பில் இன்னும் கூடுதலாக கவனம் செலுத்தி இருக்கலாம்.
இயக்கம்
அழகான குடும்பத்தை சீரழிக்கும் அரசியல்வாதிகளையும் இளம் பெண்களின் பாதுகாப்பையும் விழிப்புணர்வோடு சொல்லியுள்ளார் அருண் கே.பிரசாத். படத்தின் முதல் பாதி சற்று சலிக்க வைத்தாலும் இரண்டாம் பாதி நன்றாக இயக்கியுள்ளார். அடுத்து என்ன நடக்கபோகிறது என்ற ஆர்வத்தை தூண்டும் விதமாக காட்சிகளை அமைத்துள்ளார் இயக்குனர். படத்தின் நேர அளவை 2 மணி நேஎரத்திற்கும் குறைவாக வைத்திருப்பது படத்தின் பலம்.
ஒளிப்பதிவு
எம்.ஏ ஆனந்த் காட்சிப் பதிவை சிறப்பாக செய்துள்ளார்.
தயாரிப்பு
கேகேடி மற்றும் குன்றம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் அக்கரன் திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.








