என் மலர்


அஹோ விக்ரமார்க்கா
நேர்மையற்ற காவல் அதிகாரி பற்றிய கதை
கதைக்களம்
பூனேவில் உள்ள ஒரு ஊரில் கிராமத்தில் வசித்து வந்தவர்களை 1000 மேற்பட்டோர்களை அடிமையாக்கி ஒரு அரக்கன் தன்னுடைய வேலைக்காக கொண்டு செல்கிறான்.
இது ஒரு பக்கம் இருக்க. மறு பக்கம் கதாநாயகனான தேவ் கில் அதே ஊரில் காவல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். நேர்மையற்ற முறையில் மக்களுக்கு உதவி செய்தாலே அது அனைத்திற்க்கும் பணம் எதிர்பார்க்கும் ஒரு குணம். பணம் வாங்கிக்கொண்டு சமூகத்துக்கு இழிவான போதைப் பொருள் கடத்துவதற்கும் உதவி செய்கிறார். கதாநாயகியான சித்ரா சுக்லாவை காதலித்து வருகிறார். சித்ரா சுக்லாவுக்கு தெரியாது தேவ் கில் ஒரு மோசமான காவல் அதிகாரி என.
இந்நிலையில் அந்த அசுர வில்லன் ஒரு கொலையை செய்யும் போது அதற்கு சாட்சியாக சித்ரா சுக்லா ஆகிவிடுகிறார். இதனால் சித்ராவின் உயிருக்கே ஆபத்து வருகிறது. அக்கரம செயலை செய்யும் வில்லனுக்கு துணைப்போன தேவ் . தன் காதலியை எப்படி அவரிடம் இருந்து காப்பாற்றினார் என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
தேவ் கில் ஓரளவுக்கு நடிக்க முயற்சி செய்து இருக்கிறார். சித்ரா சுக்லா கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார். மற்ற நடிகர்கள் அவர்களது பங்கை செய்துள்ளனர்.
இயக்கம்
ரவுடி போலீஸ் கான்சப்டில் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் திரிகோட்டி. பல படங்களின் காட்சிகளை ஒன்றாக தைத்தது போன்ற உணர்வை பார்வையாளர்களுக்கு கடத்துகிறார். கதாநாயகன் பேசும் வீர வசனங்களை கேட்க முடியவில்லை. காட்சி அமைப்பில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
ஒளிப்பதிவு
கரம் சாவ்லா அழகான ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார்.
இசை
ஆர்கோ ப்ரவோவின் இசை கேட்கும் ரகம்.
தயாரிப்பு
தேவ் கில் இப்படத்தை தயாரித்துள்ளார்.









