என் மலர்


ஆண்டவன்
.
கதைக்களம்
சென்னையில் ஐடி துறையில் வேலை பார்க்கும் நாயகன் மகேஷ் வேலையை உதறிவிட்டு தனது கிராமத்திற்கு மீண்டும் வருகிறார். குச்சம்பட்டி என்ற கிராமத்தில் வயதான ஒரு முதியவர் மூதாட்டியுடன் புளிய மரத்தடியில் வாழ்ந்து வருகின்றார். இது பற்றி அவர் தனது யூடியூப் சேனலில் பதிவிடுகிறார்.
இதைப் பார்த்த அந்த மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி முதியவர்களுக்கு சொந்த வீடு கட்டித் தருகிறார். மேலும் கிராமத்துக்கும் பல திட்டங்களை அறிவிக்கிறார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த வில்லன் முத்து செல்வத்துக்கும் மகேசுக்கும் பிரச்சினை ஏற்படுகிறது.
இறுதியில் மகேஷுக்கும், முத்து செல்வத்துக்கும் நடந்த பிரச்சனை என்ன? பிரச்சனையின் முடிவு என்ன ஆனது?
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்த மகேஷ் மற்றும் அவருக்கு ஜோடியாக நடித்த வைஷ்ணவி ஆகியோர் நடிப்பு நேர்த்தியாக இருக்கிறது. கஞ்சா கருப்பு, முத்துக்காளை, ஹலோ கந்தசாமி, லட்சுமணன், உக்கிர பாண்டியன் ஆகியோர் நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.
வில்லனாக மிரட்டும் முத்து செல்வம், அம்மா கதாபாத்திரத்தில் வரும் ஆதிரா நடிப்பும் கவனிக்க வைத்து இருக்கிறது. கலெக்டராக வரும் பாக்யராஜ் நடிப்பு ரசிக்க வைக்கிறது.
இயக்கம்
கிராமத்தில் நடந்த உண்மையான சம்பவத்தை கொண்டு இந்த படத்தை விறுவிறுப்பாகவும் விழிப்புணர்வுடனும் இயக்கியிருக்கிறார் இயக்குனர் வில்லி கண்ணன். பிழைப்பு தேடி நகரத்துக்கு நகர்ந்துள்ள மக்களுக்கு தங்கள் கிராமத்தையும் காப்பாற்றுங்கள் என்ற கருத்தை சொல்லி இருக்கிறார். சுவாரசியமான காட்சிகள், தெளிவான திரைக்கதை இல்லாதது படத்திற்கு பலவீனம்.
ஒளிப்பதிவு
கிராமத்து அழகை ஓரளவிற்கு ரசிக்கும் படி படம் பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் மதுபாலன்.
இசை
சார்லஸ் தனா இசையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.










