என் மலர்


ஆகக்கடவன
.இந்த உலகில் நடப்பவை அனைத்திருக்கும் ஒரு காரணம் இருக்கிறது என்ற மையக்கருத்தை வைத்து உருவாகியுள்ள திரைப்படமாகும்.
கதைக்களம்
ஆதிரன் சுரேஷ், , சி.ஆர்.ராகுல், ராஜசிவன் மூவரும் ஒரு மருந்தகத்தில் வேலை செய்கிறார்கள். அங்கு மூவரும் மிகவும் நெருங்கிய நண்பர்களாக ஆகின்றனர். இவர்கள் வேலைப்பார்த்து வரும் மருந்தகம் விற்பனைக்கு வருகிறது அதனை இவர்கள் சொந்தமாக வாங்க முயற்சிக்கின்றனர். அதற்காக ரூ.6 லட்சம் பணம் சேர்க்கிறார்கள். ஆனால் எதிர்ப்பாராத விதமாக அந்த பணம் திருடுபோகிறது. இதனால் அடுத்து ஊரில் உள்ள நிலத்தை விற்று பணம் ரெடி செய்வதற்காக இருசக்கர வாகனத்தில் ஊருக்கு செல்கிறார்கள். அப்பொழுது அவர்கள் செல்லும் இருசக்கர வாகனம் பஞ்சராகிவிடுகிறது. அங்கு பொட்டல் காட்டு பகுதியில் இருக்கும் பஞ்சர் கடைக்கு பஞ்சர் போட செல்கின்றனர்.
அப்போது அங்கு கொலை, கொள்ளையில் ஈடுப்படும் ஒரு கும்பல் இருக்கிறது. அந்த கும்பலிடம் இவர்கள் சிக்கிக் கொள்கின்றனர். எதற்காக இந்த கும்பல் இவர்களை கடத்தி வைத்துக் கொள்கின்றனர்? தொலைந்த பணம் கிடைத்ததா? இந்த கும்பலுக்கும் இவர்களுக்கும் உள்ள பின்னணி என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் ஆதிரன், மிக இயல்பாக நடித்திருக்கிறார். எமோஷன் காட்சிகளில் மிக உயிர்ப்புடன் நடித்துள்ளார்.
ஆதிரனுக்கு நேர் எதிர் வேடத்தில் நடித்திருக்கும் ராகுல், அவசரப்பட்டு செய்யும் அனைத்து செயல்களும் விபரீதத்தில் முடிந்தாலும், கதையின் திருப்புமுனை கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி நடித்திருக்கிறார்.
வின்சென்ட் .எஸ் மற்றும் மைக்கேல்.எஸ் இருவருமே கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்துள்ளனர்.
இயக்கம்
இந்த உலகில் நடப்பவை அனைத்திற்கும் ஒரு காரணம் இருக்கிறது என்ற மையக்கருத்தை வைத்து இயக்கியுள்ளார் தர்மா. படத்தின் திரைக்கதை பெரிய பலமாக அமைந்துள்ளது. குறிப்பாக இரண்டாம் பாதியில் இவர்களுக்கும் அந்த மர்ம கும்பலுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என பார்வையாளர்களுக்கு கேள்வியை தூண்டும் வகையில் அமைந்தது சிறப்பு.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளர் லியோ வி.ராஜா, பொட்டல் காட்டையும், அமைதியான அந்த பஞ்சர் கடையையும் கதைக்களத்திற்கு ஏற்றார் போல படம் பிடித்து காட்டியுள்ளார்.
இசை
இசையமைப்பாளர் சாந்தன் அன்பழகநின் பின்னணி இசை திரைக்கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
தயாரிப்பு
SARAH KALAIKOODAM நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.








