என் மலர்


2K லவ் ஸ்டோரி
கதைக்களம்
சிறுவயதில் இருந்தே நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகிறார்கள் ஜெகவீர் மற்றும் மீனாட்சி. ஒரே பள்ளிக்கூடத்தில் படித்து அதற்கு பின் ஒரே கல்லூரியில் படித்து அதற்கு பிறகு ஒன்றாக சேர்ந்து ஒரு வெட்டிங் போட்டோகிராபி கம்பனியை தொடங்குகின்றனர். இவர்கள் எங்கு சென்றாலும் இவர்களை காதலர்கள் என கூறுகிறார்கள் ஆனால் இவர்கள் இருவருக்கும் இடையே நல்ல நட்பு மட்டுமே இருக்கிறது.
இப்படி இருக்கும் சூழ்நிலையில் பவித்ரா என்பவரை ஜெகவீர் காதலிக்க தொடங்குகிறார். மீனாட்சியுடன் நெருங்கி பழகுவது அவருடன் நட்பு வைத்துக் கொள்வது என்பது பவித்ராவிற்கு பிடிக்கவில்லை. இதனால் ஜெகவீரை மீனாட்சியுடன் இருக்கும் நட்பை விட சொல்கிறார். ஆனால் ஜெகவீர் அதை செய்ய மறுக்கிறார். காதலுக்கும் நட்புக்கும் இடையே சிக்கித் தவிக்கிறார் ஜெகவீர். இதற்கு அடுத்து என்ன ஆனது? ஜெகவீர் காதல் ஒன்று சேர்ந்ததா? காதலா? நட்பா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
கதாநாயகனாக ஜெகவீர் முடிந்த அளவுக்கு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மீனாட்சி அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். பால சரவணன், ஜி.பி முத்து மற்றும் சிங்கம்புலி ஆகியோரின் நகைச்சுவை காட்சிகள் ஓரளவுக்கு எடுப்பட்டுள்ளது.
சிங்கம்புலி, ஜெய பிரகாஷ், நந்தினி ஆகியோர் அவர்களது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
இயக்கம்
இக்காலத்து இளைஞர்களின் காதல், நட்பு அவர்கள் மேற்கொள்ளும் எமோஷனை மையமாக வைத்து திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் சுசீந்திரன். படத்தின் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்திருக்கலாம். படத்தில் ஆங்காங்கே இருக்கும் தொய்வான காட்சிகளை தவிர்த்து இருக்கலாம்.
இசை
டி.இமானின் இசை கேட்கும் ரகம். பின்னணி இசை ஓரளவுக்கு ரசிக்க முடிகிறது.
ஒளிப்பதிவு
வி.எஸ் ஆனந்த கிருஷ்ணனின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.
தயாரிப்பு
Citylight Pictures நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது











