என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    இந்த தடவ பிரதீப் தீபாவளி : ஒரே நாளில் வெளியாகும் இரண்டு திரைப்படங்கள்
    X

    இந்த தடவ பிரதீப் தீபாவளி : ஒரே நாளில் வெளியாகும் இரண்டு திரைப்படங்கள்

    • இயக்குனர் விக்னேஷ் சிவன் லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
    • பிரதீப் ரங்கநாதன் , ட்யூட் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

    இயக்குனர் விக்னேஷ் சிவன் லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்து உள்ளனர்.

    இந்தப் படத்தை நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. இந்தப் படத்தில் எஸ்.ஜே. சூர்யா, சீமான் ஆகியோர் நடித்துள்னர். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

    மேலும் பிரதீப் ரங்கநாதன் , ட்யூட் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை கீர்த்திஸ்வரன் இயக்கியுள்ளார். மமிதா பைஜு ஜோடியா நடிக்க மைத்ரி மூவீஸ் படத்தை தயாரித்துள்ளது. இப்படமும் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்தது. இதனால் தீபாவளி அன்று ஒரே நாளில் பிரதீப் ரங்கநாதன் நடித்த இரண்டு திரைப்படங்கள் வெளிவர இருக்கிறது. இந்த முடிவு அப்படியே இருக்குமா இல்லை படக்குழு முடிவை மாற்றுமா என பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

    Next Story
    ×