search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    காதலர் தினத்தன்று வித்தியாசமான கோரிக்கையை முன்வைத்த பிரேம் ஜி- வைரலாகும் டுவீட்
    X

    பிரேம் ஜி அமரன்

    காதலர் தினத்தன்று வித்தியாசமான கோரிக்கையை முன்வைத்த பிரேம் ஜி- வைரலாகும் டுவீட்

    • நடிகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகத்தன்மை கொண்டவர் பிரேம் ஜி அமரன்.
    • இவர் தற்போது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    நடிகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகத்தன்மை கொண்டவர் பிரேம் ஜி அமரன். இவர் பிரபல இசையமைப்பாளரும் இயக்குனருமான கங்கை அமரனின் இளைய மகனும் வெங்கட் பிரபுவின் சகோதரரும் ஆவார். சென்னை 28, சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி போன்ற பல படங்களில் நடித்து பிரபலமடைந்தார். இவர் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பிரின்ஸ் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

    பிரேம் ஜி அமரன்


    உலகம் முழுவதும் இன்று காதலர் தினத்தை கொண்டாடி வரும் நிலையில் பிரேம் ஜி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், பிப்ரவரியில் இருந்து 29 ஆம் தேதி 30 மற்றும் 31 ஆம் தேதிகளை அகற்றியவர்கள் 14 ஆம் தேதியையும் அகற்றவும் என்று பதிவிட்டுள்ளார். காதலர் தினத்தன்று வித்தியாசமான கோரிக்கையை முன்வைத்த பிரேம் ஜியை ஆதரித்து சிங்கிள்ஸ் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இவரின் இந்த பதிவால் இணையத்தில் சிரிப்பலை எழுந்துள்ளது.

    Next Story
    ×