என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பிரபல மலையாள நடிகர் காரியவட்டம் சசிகுமார் மரணம்
    X

    காரியவட்டம் சசிகுமார்

    பிரபல மலையாள நடிகர் காரியவட்டம் சசிகுமார் மரணம்

    • கிரைம் பிராஞ்ச் படத்தின் மூலம் மலையாள திரையுலகிற்கு அறிமுகமானவர் காரியவட்டம் சசிகுமார்.
    • உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார்.

    பிரபல மலையாள நடிகர் காரியவட்டம் சசிகுமார், ஏராளமான மலையாள படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார். 1989-ல் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய கிரைம் பிராஞ்ச் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அந்த படத்தில் அவரது நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்ததால் தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன.

    காரியவட்டம் சசிகுமார்

    அதன்பின்னர் நாகம், மிமிக்ஸ் பரேட், தேவசுரம், காம்பூலம், குஷ்ருத்தி கட்டு, ஆதாயத்தே கண்மணி உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். திருவனந்தபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த காரியவட்டம் சசிகுமாருக்கு சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்களின் தீவிர சிகிச்சையில் இருந்து வந்த அவர் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். காரியவட்டம் சசிகுமார் மறைவுக்கு மலையாள நடிகர்-நடிகைகள், திரைபிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×