என் மலர்

  சினிமா செய்திகள்

  விக்ரம் திறமை கண்டு எனக்குள் சிறிய பொறாமையே ஏற்படும் - இயக்குனர் அஜய் ஞானமுத்து
  X

  அஜய் ஞானமுத்து

  விக்ரம் திறமை கண்டு எனக்குள் சிறிய பொறாமையே ஏற்படும் - இயக்குனர் அஜய் ஞானமுத்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் கோப்ரா.
  • இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

  அஜய் ஞானமுத்து இயக்கித்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் 'கோப்ரா'. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும், கே.எஸ்.ரவிகுமார், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். லலித் குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


  கோப்ரா

  இந்நிலையில் 'கோப்ரா' படத்தின் பாடல்கள் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழு, திரைத்துறையினர் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். விழாவில் பேசிய இயக்குனர் அஜய் ஞானமுத்து, ''இமைக்கா நொடிகள் படம் வெளியாவதற்கு முன் தயாரிப்பாளர் லலித் குமார் என்னை அழைத்து, சீயான் விக்ரம் அவர்களின் கால்ஷீட் இருக்கிறது. அவர்களை வைத்து படமொன்றை தயாரிக்க திட்டமிட்டிருக்கிறோம். பணியாற்ற இயலுமா? என கேட்டார்.

  எப்படி என் மீது அவருக்கு நம்பிக்கை ஏற்பட்டது என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கான உயரத்தை, நான் கடக்க வேண்டிய உயரத்தை அவர் நிர்ணயித்தார். என்னுடைய பெற்றோர்களே படத்தை தயாரித்திருந்தாலும் இந்த அளவிற்கு செலவழித்திருக்கமாட்டார்கள்.


  கோப்ரா

  ஆனால் தயாரிப்பாளர் லலித்குமார் என் மீதும், என்னுடைய குழுவினர் மீதும், அபார நம்பிக்கை வைத்து மிகப்பெரிய பட்ஜெட்டில் 'கோப்ரா'வை உருவாக்கி இருக்கிறார்.படப்பிடிப்பு தளத்தில் நான் எந்த காட்சியை விவரித்தாலும், என் எதிர்பார்ப்பை கடந்து, அந்த காட்சியை வியக்கும் அளவிற்கு விக்ரம் நடிப்பார். அவரின் நடிப்பு திறமையை கண்டு எனக்குள் சிறிய பொறாமையே ஏற்படும்.

  நான் 50 சதவீத அளவிற்கு நேர்த்தியை எதிர்பார்த்தால் அவர் 100 சதவீதம் அளித்து அசத்துவார். படப்பிடிப்பு தளத்தில் எனக்கும், அவருக்கும் இடையே சிறிய போட்டியே நடைபெறும். அதில் அவரே வெற்றி பெறுவார். அப்படியொரு ஒரு பர்ஃபெக்ஸனிஸ்ட்" என்று கூறினார்.

  Next Story
  ×