என் மலர்
சினிமா செய்திகள்

எம்.எஸ்.பாஸ்கரின் 'கிராண்ட் பாதர்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு
- இப்படத்திற்கு ரஞ்சின் ராஜ் இசையமைத்துள்ளார்.
- திகில் மற்றும் நகைச்சுவை கலந்து இப்படம் உருவாகி உள்ளது.
2023-ம் ஆண்டு வெளியான 'பார்க்கிங்' படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்ற எம்.எஸ்.பாஸ்கர், தற்போது குட்டி ஸ்டோரிஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் புவனேஷ் சின்னசாமி தயாரிக்கும் 'கிராண்ட் பாதர்' என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தை பிராங் ஸ்டார் ராகுல் இயக்குவதுடன், எம்.எஸ்.பாஸ்கருடன் இணைந்து முதன்மை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். மேலும், இவர்களுடன் ஸ்மீகா, அருள் தாஸ், முனீஸ்காந்த், ஸ்ரீநாத், சிவா அரவிந்த், பிரியதர்ஷினி, அஞ்சலி ராவ், அபிநயா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ரஞ்சின் ராஜ் இசையமைத்துள்ளார். திகில் மற்றும் நகைச்சுவை கலந்து இப்படம் உருவாகி உள்ளது.
இந்த நிலையில், 'கிராண்ட் பாதர்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்ததாக படக்குழு தெரிவித்துள்ளது. இதனால் இனி வரும் நாட்களில் இப்படம் தொடர்பான ஃபர்ஸ்ட் லுக், டிரெய்லர், வெளியீட்டு தேதி உள்ளிட்டவை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.






