என் மலர்
சினிமா செய்திகள்

அந்தக் கேள்விய இனிமேல் கேட்டா இதுதான் என்னோட பதிலா இருக்கும்- மாரி செல்வராஜ் காட்டம்
சென்னையில் இன்று 'பைசன்' படம் வெற்றி விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் மாரி செல்வராஜ் பேசியதாவது:-
எவ்வளது எதிர்ப்பு வந்தாலும், எவ்வளது முரண் வந்தாலும் என்னை மாற்றிவிடலாம், எனது எழுத்து நடையை மாற்றிவிடலாம் என நினைத்துவிடாதீர்கள். அது என் ரத்தத்திலேயே கிடையாது.
எனக்கு அது தான் வரும். அதைவிட்டு விலகுவதற்கான வாழ்க்கை என்னிடம் இல்லை. அதைப்பற்றிய சிந்தனைதான் அதிகமாக உள்ளது.
இந்த படத்திற்கும் அடுத்த படத்திற்கும் இடையிலான காலக்கட்டத்தில் நான் சந்திக்கும் மக்கள், அவர்களுடைய பிரச்சனைகள் மிகவும் நீண்டது. இவர்களுடைய கதையை கேட்டாளே வேறு படமே எடுக்க முடியாது.
நான் மிகவும் நிலையானவனாக இருக்க விரும்புகிறேன். திரும்ப திரும்ப மாரி செல்வரான் ஏன் சாதிய படமே எடுக்கிறார் என்று கேட்டீர்கள் என்றால், மவுனம் தான் எனது பதிலாக இருக்கும். இதுபோன்ற கேள்விகளை எதிர்காலத்தில் எதிர்கொள்ள மாட்டேன் என்று நம்புகிறேன்.
இதைநான் வேண்டுகோளாகவே சொல்கிறேன். இதுபோன்ற கேள்விகள் என்னையும், எனது பணியையும், எனது சிந்தனையையும் மிகவும் பாதிக்கிறது.
மாரி செல்வராஜ் எடுப்பது சாதி படமா என்றால் அது உங்கள் மொழி. எனது மொழி, மாரி செல்வராஜ் எடுப்பது சாதியை எதிர்ப்பு படம். அந்த எதிர்ப்பு படங்களை தொடர்ந்து நான் எடுத்துக் கொண்டே இருப்பேன்.
மாரி செல்வராஜ் படம் என்றால் அது இருக்கும். மாரி செல்வராஜ் அதற்காக கிளம்பி வந்தவன் தான்.
இவ்வாறு அவர் கூறினார்.






