ஆதரவற்றோர் இல்லத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் அருண் விஜய்!

திருக்குமரன் இயக்கத்தில் 'ரெட்ட தல' படத்தில் அருண் விஜய் நடித்துள்ளார். அருண் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு ரெட்ட தல' படக்குழு சிறப்பு போஸ்டர் வெளியிட்டது.
ஆதரவற்றோர் இல்லத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் அருண் விஜய்!
Published on

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த 'மான் கராத்தே' படத்தை இயக்கிய திருக்குமரன் அடுத்ததாக அருண் விஜயின் 'ரெட்ட தல' படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் அருண் விஜயின் ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார்.மேலும் இப்படத்தில் தன்யா ரவிச்சந்திரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்தின் இசையை சாம். சி.எஸ் மேற்கொள்கிறார்.

'ரெட்ட தல' திரைப்படம் உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வரும் டிசம்பர் 18 ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

நடிகர் அருண் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு, சிறப்பு போஸ்டர் வெளியிட்டு ரெட்ட தல' படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அருண் விஜய் ஆதரவற்றோர் இல்லத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com