என் மலர்tooltip icon

    உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் மனைவி ஒலனா ஜெலன்ஸ்கா... ... லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுடனான உறவை முறித்த ரஷியாவின் நட்பு நாடு

    உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் மனைவி ஒலனா ஜெலன்ஸ்கா இன்று அமெரிக்க பாராளுமன்றத்தில் எம்.பி.க்களிடையே உரையாற்றினார். அப்போது, உக்ரைனுக்கு அமெரிக்கா அளித்த உதவிகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், தற்போது வான் பாதுகாப்பு அமைப்புகளை அனுப்பவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    “துரதிர்ஷ்டவசமாக போர் முடிவுக்கு வரவில்லை. பயங்கரவாதம் தொடர்கிறது. இந்த போரில் கொல்லப்பட்டவர்கள் சார்பாகவும், கை கால்களை இழந்தவர்கள் சார்பாகவும், இன்னும் உயிருடன் இருப்பவர்கள் சார்பாகவும், போர் நடைபெறும் முன்களப் பகுதியில் இருந்து தங்கள் குடும்பத்தினர் திரும்ப வருவார்கள் என்ற நம்பிக்கையில் காத்திருப்பவர்கள் சார்பாக வேண்டுகோள் விடுக்கிறேன். நான் கேட்க விரும்பாத ஒன்றைக் கேட்கிறேன், ஆயுதங்களைக் கேட்கிறேன்” என்று உருக்கமாக பேசினார் ஒலனா ஜெலன்ஸ்கா.

    Next Story
    ×