என் மலர்
உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்குவதற்கு 2 நாளுக்கு... ... லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுடனான உறவை முறித்த ரஷியாவின் நட்பு நாடு
உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்குவதற்கு 2 நாளுக்கு முன் உக்ரைனின் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் மாகாணங்களை தனி நாடுகளாக ரஷிய அதிபர் புதின் அறிவித்தார். சிரியா உள்ளிட்ட ஓரிரு நாடுகள் மட்டுமே இவற்றை சுதந்திர நாடுகளாக அங்கீகரித்தன.
ரஷியாவின் நட்பு நாடான வடகொரியா உக்ரைனின் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் மாகாணங்களை சுதந்திர நாடுகளாக தற்போது அங்கீகரித்துள்ளது. இதையடுத்து, வடகொரியாவுடனான தூதரக உறவுகளை துண்டிப்பதாக உக்ரைன் அறிவித்தது.
இந்நிலையில், வடகொரியாவின் இந்த முடிவு உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
Next Story






