என் மலர்
ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைன் ராணுவத்திற்கு... ... லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுடனான உறவை முறித்த ரஷியாவின் நட்பு நாடு
ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைன் ராணுவத்திற்கு உதவுவதற்காக அந்நாட்டைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் போர்க்களத்தில் குதித்தனர். அவ்வாறு புதிதாக உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்தவர்களுக்கு இங்கிலாந்தில் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சுமார் 10 ஆயிரம் உக்ரைன் வீரர்களுக்கு இங்கிலாந்து ராணுவத்தின் உதவியுடன் பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, உக்ரைனில் இருந்து வீரர்களின் குழு ஒன்று இங்கிலாந்திற்கு சென்றது. அங்கு அவர்களுக்கு ஆயுதங்களை கையாள்வது, அவசரகால போர் நுணுக்கங்கள், போர்க்களத்தில் காயம் அடைந்தவர்களுக்கு முதலுதவி செய்தல் உள்ளிட்டவை குறித்து பயிற்சி வழங்கப்படுகிறது என இங்கிலாந்து பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
Next Story






