என் மலர்tooltip icon

    உக்ரைனின் தெற்கு பகுதியில் உள்ள பெரும்பாலான... ... லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுடனான உறவை முறித்த ரஷியாவின் நட்பு நாடு

    உக்ரைனின் தெற்கு பகுதியில் உள்ள பெரும்பாலான நகரங்களை ரஷிய ராணுவம் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. தற்போது கிழக்கு உக்ரைனில் கடுமையான போர் நடந்து வருகிறது. கடந்த வாரம் லிசிசான்ஸ்க் நகரத்தை ரஷிய படை கைப்பற்றியது. மேலும் ரஷிய ராணுவம் தனது தாக்குதலை தொடர்ந்து வருகிறது.

    இந்நிலையில், கிழக்கில் ரஷியா ஒரு புதிய நரகத்தை உருவாக்கி வருவதாக உக்ரைனைச் சேர்ந்த மாகாண கவர்னர் செர்ஹி ஹைதை தெரிவித்துள்ளார்.

    இரவு முழுவதும் ரஷிய படைகள் ராக்கெட் ஏவுகணைகள், பீரங்கி குண்டுகள் உள்ளிட்டவற்றைக் கொண்டு தாக்குதல் நடத்தின. தங்களால் முடிந்த அளவிற்கு ரஷிய படைகளின் முன்னேற்றத்தை தடுத்து வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×