என் மலர்
உக்ரைன் ரஷியா போர் குறித்து தன் கேமராவில் பதிவான... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு
உக்ரைன் ரஷியா போர் குறித்து தன் கேமராவில் பதிவான காட்சிகளை உக்ரைன் பெண் டாக்டர் டைரா மரியுபோல் நகரில் இருந்த சர்வதேச பத்திரிகையாளர் குழுவுக்கு அனுப்பினார். அந்த வீடியோக்களுடன் பத்திரிகையாளர் ஒருவர் உக்ரைனிலிருந்து தப்பிச் சென்றார். அந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் அவர் வெளியிட அவை வேகமாக பரவின. அந்த வீடியோக்களில் உக்ரைன் மக்களிடம் ரஷிய ராணுவம் மனிதநேயமற்ற முறையில் நடந்துகொள்ளும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இதனால் ஆத்திரமடைந்த ரஷிய படைகள் மரியுபோலில் இருந்த டாக்டர் டைராவை மார்ச் மாதம் கைதுசெய்தது. அவரை விடுவிக்க உக்ரைன் அரசும், டைராவின் குடும்பத்தினரும் பேச்சு நடத்தியதால் 3 மாதத்துக்கு பின் டாக்டர் டைராவை ரஷிய படைகள் விடுவித்தன.
Next Story






