என் மலர்
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், உக்ரைன்... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், உக்ரைன் சென்று, அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார். தலைநகர் கீவ்வில் இந்த சந்திப்பு நடைபெற்றது. ஜெலன்ஸ்கியுடன் இருக்கும் புகைப்படத்தை தமது டுவிட்டர் பதிவில் ஜான்சன் பகிர்ந்துள்ளார்.
ரஷியா போர் தொடுத்த பிறகு இங்கிலாந்து பிரதமர், இரண்டாவது முறையாக உக்ரைன் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உக்ரைனின் ஆயுதப் படைகளுக்கு ஒரு பெரிய பயிற்சி நடவடிக்கையைத் தொடங்க, இங்கிலாந்து முன்வந்துள்ளதாக இங்கிலாந்து பிரதமரின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆயிரக்கணக்கான வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Next Story






