என் மலர்
ரஷிய படையெடுப்பு காரணமாக உக்ரைனில் சுமார் 24... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு
ரஷிய படையெடுப்பு காரணமாக உக்ரைனில் சுமார் 24 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த குளிர்காலப் பயிர்களை அறுவடை செய்யமுடியாத நிலையில் இருப்பதாக உக்ரைன் வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த பயிர்களின் மொத்த மதிப்பு 1.435 பில்லியன் டாலர் ஆகும்.
ரஷிய படையெடுப்பின் காரணமாக உக்ரைன் வேளாண் துறை இதுவரை 4.292 பில்லியன் டாலர் இழப்பை சந்தித்துள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 42,000 ஆடுகள், 92,000 பசுக்கள், 2,58,000 பன்றிகள் மற்றும் 57 லட்சத்திற்கும் அதிகமான பறவைகள் கொல்லப்பட்டதாக வேளாண் அமைச்சகம் கூறியிருக்கிறது.
Next Story






