என் மலர்
ரஷிய அதிபர் புதின் உள்பட அந்நாட்டின் பிற முக்கிய... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு
ரஷிய அதிபர் புதின் உள்பட அந்நாட்டின் பிற முக்கிய தலைவர்கள் மீது உக்ரைன் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. உக்ரைனின் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கவுன்சின் வெளியிட்ட தடை உத்தரவில் அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கி கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் ரஷிய அதிபர், ரஷ்ய பிரதமர், ரஷிய வெளியுறவு அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், துணைப் பிரதமர்கள், அமைச்சர்கள் மற்றும் கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் உள்பட பிற அதிகாரிகள் மீது காலவரையின்றி பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படுகிறது. உக்ரைனில் உள்ள அவர்களது சொத்துக்களுக்கு தடை, ஏற்றுமதி இறக்குமதி நடவடிக்கைகளுக்குத் தடை, உக்ரைனிலிருந்து மூலதனத்தை திரும்பப் பெறுவதைத் தடுப்பது ஆகியவை இந்த உத்தரவில் இடம் பெற்றுள்ளன. இது குறித்த ஆணை வெளியிடப்பட்ட நாளிலிருந்து இந்த தடை உத்தரவு நடைமுறைக்கு வருகிறது.
Next Story






