என் மலர்
கிழக்கு உக்ரைனின் செவிரோடொனெட்ஸ்க், லிசிசான்ஸ்க்... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு
கிழக்கு உக்ரைனின் செவிரோடொனெட்ஸ்க், லிசிசான்ஸ்க் நகரங்கள் ரஷிய படைகளின் மூர்க்கத்தனமான தாக்குதல்களால் அழிக்கப்பட்டுள்ளன. அந்த நகரங்கள் செத்த நகரங்களாகி விட்டன என உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு நகரமான ஜபோரிஜியா நகரையும் கைப்பற்ற ரஷிய படைகள் குறிவைத்துள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதுதான் தொழில்துறை பிராந்தியமான டான்பாஸ் பிராந்தியத்தினை பிடிப்பதற்கு திறவுகோல்போல அமையும். இந்த நகரில் 7 லட்சம் பேர் வசிக்கிறார்கள். இங்கு அச்சுறுத்தும் சூழல் நிலவுகிறது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
Next Story






