என் மலர்tooltip icon

    உக்ரைன் போரில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதை... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு

    உக்ரைன் போரில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று ரஷியாவை, அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றிய அமைப்பு வலியுறுத்தி உள்ளன. அல்பேனியாவால் நடைபெற்ற ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டத்தின் போது இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

    கற்பழிப்பு, வன்முறை மற்றும் பாலியல் குற்றங்களை நிறுத்துவது ரஷ்யாவிடம் உள்ளது என்றும், உக்ரைன் மக்கள் மீதான மனசாட்சியற்ற போரை முடிவுக்கு கொண்டு வருவதும் ரஷியாவிடம் உள்ளது என்றும். அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    ரஷிய ராணுவத்தினரின் கொடூர செயல்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய தலைவர் சார்லஸ் மைக்கேல் கண்டனம் தெரிவித்துள்ளார். எனினும் இந்த குற்றச்சாட்டுக்களுக்கு, ரஷிய அதிபர் மாளிகை மறுப்பு தெரிவித்துள்ளது.

    Next Story
    ×