என் மலர்tooltip icon

    ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவின்,... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு

    ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவின், செர்பியா பயணம், ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சக மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். செர்பியாவைச் சுற்றியுள்ள நாடுகள் செர்ஜி லாவ்ரோ பயணம் செய்யும் விமானம் தங்கள் வான்வெளியை பயன்படுத்த தடை விதித்ததை அடுத்து, அவரது பயணம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதேபோல் ரஷிய தூதரக அதிகாரியை பெல்கிரேடுக்கு ஏற்றிச் செல்லும் விமானம் பறக்க தடை விதிக்கும் நடவடிக்கையாக பல்கேரியா, வடக்கு மாசிடோனியா மற்றும் மாண்டினீக்ரோ ஆகிய நாடுகள் தங்கள் வான்வெளியை மூடிவிட்டதாக செர்பிய ஊடக அறிக்கை தெரிவித்துள்ளது.

    Next Story
    ×