என் மலர்tooltip icon

    துறைமுகங்கள் மூலம் தானியங்களை ஏற்றுமதி செய்வது... ... லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்

    துறைமுகங்கள் மூலம் தானியங்களை ஏற்றுமதி செய்வது தொடர்பாக துருக்கி மற்றும் ஐ.நா.வுடன் தனது நாடு தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். கியேவில் நேற்று வருகை தந்த ஸ்வீடன் பிரதமர் மக்டலேனா ஆண்டர்சனுடன், இந்த திட்டத்தை செயல்படுத்துவது சில இடங்களில் கடினமாக இருக்கும், ஆனால் நிச்சயமாக சாத்தியம் என்று ஜெலென்ஸ்கி கூறினார். ஏனெனில் உக்ரைன், தானிய ஏற்றுமதி செய்யும் நாடாகவும், அடுத்த ஆண்டு விதைப்பதற்கு ஏற்றுமதி தேவைப்படும் என்பதால் விவசாயிகளும் இதில் ஆர்வமாக உள்ளனர் என்று உக்ரேயின்ஸ்கா பிராவ்தா தெரிவித்துள்ளது.

    Next Story
    ×