என் மலர்
எத்தனைக் காலம் ஆனாலும் ரஷியாவிடமிருந்து உக்ரைனை... ... லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்
எத்தனைக் காலம் ஆனாலும் ரஷியாவிடமிருந்து உக்ரைனை பாதுகாக்க துணை நிற்போம் என ஜி 7 நாடுகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. ரஷியாவுக்கு கச்சா எண்ணெய் மூலம் கிடைக்கும் வருவாயைத் தடுத்து நிறுத்தவும் உறுதி எடுக்கப்பட்டுள்ளது. ஜி7 மாநாட்டில் ரஷியாவுக்கு கடுமையான பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய், தங்கம் இறக்குமதியைத் தடை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கருப்புக் கடல் வழியாக உக்ரைனுக்கு உணவு தானியங்கள் கொண்டு செல்ல உதவவும் ஜி 7 நாடுகள் உறுதியளித்துள்ளது.
Next Story






